Nayanthara video : சில்லுனு ஒரு வாக்கிங்!! கூலாக நடந்து சென்ற நயன்தாரா... வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த விக்கி

Published : Jan 04, 2022, 02:10 PM IST
Nayanthara video : சில்லுனு ஒரு வாக்கிங்!! கூலாக நடந்து சென்ற நயன்தாரா... வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த விக்கி

சுருக்கம்

துபாயில் கடற்கரை ஓரத்தில் காதலி நயன்தாரா உடன் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல்வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது.

விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். 2022-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நயன்தாரா, காதலனுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் இருந்ததால், வெளிநாட்டு பயணங்களை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா. இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக துபாய் சென்றிருந்தனர்.

"

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பிறகு தற்போது இருவரும் அங்கு ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். அங்கு காதலி நயன் உடன் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.

அந்த வகையில் கடற்கரை ஓரத்தில் காதலியுடன் ஜாலியாக வாக்கிங் சென்றபோது எடுத்த வீடியோவை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அதில் வீடியோ எடுப்பது தெரியாமல் நடந்து சென்ற நயன்தாரா, காதலனை பார்த்ததும் கட்டிப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Vishwanath And Sons OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்படும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்... எப்போ ரிலீஸ் தெரியுமா?
Bigg Boss 10 : ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது..! அதகளமாக ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 10 - தேதி அறிவித்த விஜய் சேதுபதி..!