இது தானா சேரும் பரபரப்பு: கில்லி ஜூலியின் அல்லு தெறிப்புகள்...

First Published Feb 13, 2018, 2:40 PM IST
Highlights
Special Write-up about jallikattu juliana


பீட்டாவுக்கு நன்றி சொல்கிறார்கள் ஜூலியின் ரசிகர்கள்! காரணம் ‘ஜல்லிக்கட்டுக்கு தடை’ என்று பீட்டா ஃபிலிம் காட்டியபோதுதானே  தமிழகத்தில் ’மோதி பாரு! நான் தாறுமாறு!’ என்று கொம்பு முளைக்காத காளைகளாக இளைஞர் எழுச்சி எழுந்தது. 

மெரீனா கரையில் கடலே மிரண்டு உள்வாங்குமளவுக்கு நடந்த இந்த  போராட்டத்தை மீடியாவின் கண்கள் வளைத்து வளைத்து பல இளம் போராளி பட்டாளத்தை விழுங்கின. பாஸிங் கிளவுட்ஸ்! போல் பல முகங்கள் கடந்து சென்றன. ஆனால் அவர்கள் அத்தனை பேரிலும் ‘தனி ஒருத்தி’யாய் நின்று தடம் பதித்த ஒரே கிளி! அது ஜூலிதான். 

அடுத்த வீதி கவுன்சிலரை கூட அவனவன் பகைத்துக் கொள்ள பயந்து நடுங்கும் வேளையில், அப்போது தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை பொளந்து கட்டிய ஜூலியின் தாறுமாறு தெனாவெட்டை அ.தி.மு.க.வினரே ரசித்ததுதான் ஹிட்டு. ஜூலியை பன்னீர் எங்கேயாவது சந்தித்தால் கூட ‘என்னம்மா! இப்படி பண்ணிட்டியேம்மா?’ என்று விசனப்படுமளவுக்கு மேடத்தின் பாய்ச்சல் பாய்ந்தடித்தது. 

ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியோடு முடிந்தபோது இணையத்தில் வாழ்த்து  மழை வாங்கிக் கட்டியதில் ராகவா லாரன்ஸுக்கு இணையாக நின்றார் ஜூலி. அதேநேரத்தில் இணைய வெளியிலும், யதார்த்த பாதைகளிலும் பலரது பொறாமைக்கும் ஆளானார் ஜூலி. இவரை வறுத்தெடுத்து விமர்சனம் செய்வதே சிலருக்கு ஆல்டைம் பொழுதுபோக்காக இருந்தது தனி கதை. 

ஜல்லிக்கட்டோடு ஜூலி எரா! முடிந்தது என்று பலர் நினைத்தபோது ‘ஐ ஆம் பேக்’ என்று  கிக் ஆக வந்து நின்றார் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில். சினிமா துறையில் பல ஆண்டுகளாக தடம் பதித்த ’சிநேகன், காயத்ரி, நமீதா’ ஆளுமைகளுக்கு நடுவில் ஜூலியையும் விஜய் டி.வி. கொண்டு சென்று நிறுத்தியதற்கு, குறுகிய காலத்தில் அவர் அடித்த சிக்ஸர்களே காரணமேன்பதை தமிழகம் உணர்ந்தது. 
பிக் பாஸிலும் ஜூலி ‘வந்தாள்! சென்றாள்’ என்றில்லாமல் அழுந்த தடம் பதித்தார். நட்பு, காதல், கோபம், வெறுப்பு, அழுகை, சூது ...என்று ஒவ்வொரு மனிதனுக்குமான யதார்த்த உணர்வுகளை சூழலுக்கு ஏற்ப ஜுலி வெளிப்படுத்தி அந்த நிகழ்ச்சியின் எய்மை மிக துல்லியமாக அடைந்து காட்டி அப்ளாஸ் அள்ளினார். 

உலக நாயகன் கமல்ஹாசனின் புதுப்படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பதையே பெரிய சாதனையாக நினைக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்ட தமிழ்நாடு இது. அப்பேர்ப்பட்ட கமல்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ’பிக் பாஸ்’ என்பதால், அவரிடம் ஜஸ்ட் லைக் தட் ஆக ஜூலி மூவ் செய்ததை பார்த்து தெறித்தது தமிழ்நாடு. பிக் பாஸ் வீட்டினுள் இருந்த மற்றவர்கள் திரையுலகை சேர்ந்தவர்கள். அவர்களிடம் கமல்ஹாசன் இயல்பாகவும், உரிமையெடுத்தும் மூவ் செய்ததில் வியப்பில்லை. ஆனால் சினிமாவுக்கு தொடர்பில்லாத ஜூலியிடம் கமல் வாதங்கள் செய்ததும், ஜூலி அதற்கு கம்பீரமாக எதிர்வாதம் வைத்ததும் அட்ரா சக்கை தருணங்கள்!

இப்படி கலக்கிய ஜூலியின் சீசன் 2 ரவுண்டானது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியுடன் முடிந்துவிடும் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் ‘நானா போனாலும் தானா என்னை இழுக்குது பரபரப்பு’ என்றபடி டி.வி. ஷோவை தொகுத்து வழங்குவது, விளம்பரங்களில் நாயகியாக, விமல் படத்தில் சிறப்பு தோற்றம் என்று போய்க் கொண்டிருந்த ஜூலியின் கெத்து கிராஃப் ‘உத்தமி’ படத்தில் ஹீரோயினாக கமிட் ஆனதன் மூலம் செம்மத்தியான உச்சம் தொட்டிருக்கிறது. 

இந்த சந்தோஷத்தில் லயித்துக் கிடக்கும் ஜூலியை ‘யாஹ்! ஐ மேட் இட்’ என்று சக்ஸஸ் விரல் காட்ட வைத்திருக்கிறது ‘The Most Trending Face Of The Year' என்று தேசி விருதுகள் கொடுத்துள்ள ‘அவார்டு’. கடந்த ஆண்டில் சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் அதிகமாக டிரெண்டான முகமானது ஜூலியுடையதுதான் என்று பாராட்டியை இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. 

தன் முகத்தை போட்டு விமர்சனம் செய்தவர்களை அன்று கண்டித்ததில்லை ஜூலி, ஆனால் தொடர்ந்து தன்னை லைம் லைட்டில் வைத்து இருந்ததற்காக இன்று அவர்களுக்கு விருதோடு சேர்த்து நன்றி சொல்கிறார் அவர். 

ஜூலியிடம், ‘எப்டி ஃபீல் பண்றீங்க இந்த உச்சத்தை?’ என்று கேட்டால் “நானா நகர்ந்தாலும் கூட இது தானா வந்து சேரும் பரபரப்பு பாஸ். சாமான்யனும் சாதிக்க முடியும்! அப்படிங்கிறதுக்கு லிவ்விங் உதாரணமா இருக்குறதுல ஹேப்பியே!’ என்றபடி மலேஷியா மற்றும் சிங்கப்பூரில் நடக்க இருக்கும் இசை நிகழ்ச்சியில் பிக்பாஸ் டீமின் முக்கிய முகங்களான சிநேகன் மற்றும் ஓவியாவுடன் கலந்து கொள்ள கிளம்புகிறார் இந்த மோஸ்ட் டிரெண்டிங் முகம் ஜூலி!

நீ அல்லு தெறிக்க விடு பேபி!
 

click me!