அப்படி போடு... வேற லெவல் நடிகை ஜோதிகாவின் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

Published : Nov 08, 2021, 11:54 AM IST
அப்படி போடு... வேற லெவல் நடிகை ஜோதிகாவின் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

சுருக்கம்

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'காற்றின் மொழி' திரைப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை கிடைத்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது வெளியாக, ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  

நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான 'காற்றின் மொழி' திரைப்படத்திற்கு சிறப்பு அங்கீகாரத்தை கிடைத்துள்ளது. இது குறித்த தகவல் தற்போது வெளியாக, ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

நடிகை ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு  '36 வயதினிலே' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்க தொடங்கிய பின்னர், அதிகப்படியாக பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் குடும்பத்தினரால் திறமை இல்லாத பெண்ணாக பார்க்கப்படும் ஜோதிகா, அவரது  திறமையை வெளிக்காட்டி எப்படி தன்னை ஒரு தைரியமான பெண்ணாக வெளிக்காட்டி கொள்கிறார் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் 'காற்றின் மொழி'. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜோதிகா ஒரு ஆர்.ஜே -வாக நடித்திருப்பார்.

காற்றின் மொழில்: Mahima Nambiar: பாவாடை தாவணி செம்ம ஷேப்பு... லைட்டாக இடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் மஹிமா நம்பியார்!!

 

பாலிவுட்டில் நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான, 'Tumhari Sulu ' என்கிற படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியானது. இந்தப் படத்தில் தன்னுடைய தனித்துவமான நடிப்பில் அசத்தியிருந்தார் ஜோதிகா. இந்நிலையில் இந்தபடத்திற்கு தான் தற்போது சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

காற்றின் மொழில்: அய்யோ... செம்ம கியூட் குழந்தை போல் விதவிதமாக ரியாக்ஷனில் ரசிகர்களை ஈர்க்கும் அனுபமா பரமேஸ்வரன்!

 

உலகின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சி, துபாயில் துவங்க உள்ளது. இதில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவும் தனது தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், சேவை துறை மற்றும் பிற துறைகளை விளம்பரப்படுத்தும் இந்நிகழ்ச்சியில், கலாச்சாரம் மற்றும் சினிமா உட்பட பெரிய அளவில் பங்கேற்பு செய்ய உள்ளது. இந்த விழாவில்தான் தற்போது நடிகை ஜோதிகா நடித்துள்ள 'காற்றின் மொழி' திரைப்படம் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடிகர் விதார்த் நடித்திருந்தார். லட்சுமி மஞ்சு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்றின் மொழில்: கழுத்தில் மாட்டி இருக்கும் தம்மாத்தூண்டு கயிறு தான் பேலன்ஸ்..! முரட்டு கவர்ச்சியில் மிரள விட்ட மிர்னாலினி..!

 

கடந்த அக்டோபர் மாதம் நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாக உருவாகி இருந்த 'உடன்பிறப்பே' திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்திற்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்தப்படத்தில் ஜோதிகாவுக்கு அண்ணனாக சசிகுமாரும், கணவராக சமுத்திரக்கனியும் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தை இ.ரா சரவணன் இயக்கியிருந்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?