
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கும், தொழிலதிபர் அஸ்வினுக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது. பின் தன்னுடைய மகனை பெற்று எடுக்க அம்மாவின் வீட்டுக்கு வந்த சௌந்தர்யா... கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காணரமாக நிரந்தரமாக பெற்றோருடன் தங்கி விட்டார். ஆரம்பத்தில் இவர்களை மீண்டும் சேர்ந்து வைக்க பலர் போராடியும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
சௌந்தர்யா மற்றும் அவருடைய கணவர் அஸ்வின் இருவரும் மனமுவந்து இந்தப் பிரிதலை விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
தற்போது சௌந்தர்யா தன்னுடைய மகன் வேத்துடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
விவாகரத்துக்கு பின் மீண்டும் தன்னுடைய கவனம் முழுவதையும் திரைப்படங்கள் இயக்குவது, அனிமேஷன் காட்சிகள் வடிவமைப்பது போன்ற வேலைகளில் செலுத்தினார்.
இந்நிலையில் தற்போது, சொந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபர் மகன் ஒருவருடன் காதலில் இருந்ததாகவும். இவர்களுடைய காதல் பற்றி அறிந்த, ரஜினி தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்தின் காதலுக்கு பச்சை கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் கணவர் அஸ்வின் ஏற்கனவே ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது சௌந்தர்யாவுக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.