
கல்கியின் வரலாற்று காவியங்களில் ஒன்றான 'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்க, இயக்குனர் மணிரத்னம் முழு வீச்சில் இறங்கியுள்ளார். இந்த படம் குறித்து அடுத்தடுத்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள தகவலின் படி, வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்ததியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலை வெப் சீரீஸாக எடுக்க தயாராகி வருகிறார், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா. உலக அளவில் பிரபலமான எம்.எக்ஸ் பிளேயர் என்ற நிறுவனத்துடன் இணைந்து வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது இதுகுறித்த பணிகளை தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அப்டேட்டுக்களை அவ்வப்போது வெளியிடவுள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.
இதில் இருந்து இந்த படத்தை படமாக எடுக்க இருந்த மணிரத்னத்தை, முந்தி கொண்டு 'வெப் சீரிஸ்' பணியில் தீவிரம் காட்டி வருகிறார் சௌந்தர்யா. இதற்கு பல ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.