வித்தியாசமாக பிறந்த நாள் கொண்டாடிய காஜல் அகர்வால்! யாருடன் தெரியுமா?

Published : Jun 22, 2019, 05:59 PM IST
வித்தியாசமாக பிறந்த நாள் கொண்டாடிய காஜல் அகர்வால்! யாருடன் தெரியுமா?

சுருக்கம்

தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கடந்த 15 வருடங்களாக நிலைத்திருக்கும் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என  பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்துவிட்டார்.  

தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கடந்த 15 வருடங்களாக நிலைத்திருக்கும் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என  பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்துவிட்டார்.

இதனால், தற்போது கதைக்கும் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் தரும்  படங்களை தேர்வு செய்து நடிப்பதில், அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில், நடிகை கங்கனா ரணாவத் நடித்து தேசிய விருது பெற்ற திரைப்படமான 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

 இந்தப் படம் தன்னுடைய திரையுலக வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்புவதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 19 ஆம் தேதி,  நடிகை காஜல் தன்னுடைய 34 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.

எப்போதும் தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி மகிழும் காஜல், இம்முறை சற்று வித்தியாசமாக மிருகங்களுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.  துபாய்க்கு சென்றிருந்த இவர், அங்குள்ள மிருகக்காட்சி பூங்காவில் உள்ள மான், கரடி, ஒட்டகம், ஆகிய மிருகங்களுடன் கொஞ்சி விளையாடியது மட்டுமின்றி அவற்றிற்கு பிடித்த உணவுகளை கொடுத்து இந்த பிறந்தநாளை சற்று வித்தியாசமாக கொண்டாடியுள்ளார்.

 

இது குறித்த சில வீடியோக்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!