
அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’படத் தயாரிப்பாளர் போனி கபூர் லீக் கிரிக்கெட் மேட்ச் நடத்தித்தருவதாக ரூ 2.5 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி பாலிவுட் வட்டாரத்தை மட்டுமின்றி கோலிவுட் வட்டார விநியோகஸ்தர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் 90 சதவிகிதப் பணிகள் முடிந்து அதன் வியாபாரம் பேசிக்கொண்டிருக்கும் போனிகபூருக்குத்தான் அஜீத் அடுத்த பட கால்ஷீட்டையும் கொடுத்துள்ளார். இந்நிலையில் பிரவீன் ஷியாம் சேத்தி என்பவர் போனி கபூர், முஸ்தாபா, பவான் ஜாங்கிட் ஆகிய மூவர் மீதும் 2.5கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.
நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தப்போவதாக சொல்லி என்னிடம் 2.5 கோடி பணம் கேட்டார்கள். நானும் அவர் பெரிய தயாரிப்பாளர் ஆயிற்றே என்று நம்பிக்கொடுத்தேன். ஆனாலும் மேட்சும் நடக்காமல் பணத்தையும் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள். துவக்கத்தில் என்னிடம் பணம் வாங்கியபோது பயப்படாதீர்கள்,டபுள் மடங்காக பணம் கிடைக்கும் என்று போனி கபூர் சொன்னார். ஆனால் நம்ப வைத்துவிட்டு ஏமாற்றிவிட்டார்கள்’ என்று மும்பை போலீஸில் ஷியாம் சேத்தி புகார் கொடுத்திருக்கிறார்.
இது தொடர்பாக போனிகபூர் மற்றும் இருவர் மீது இபிகோ.420,406,120 பி.ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.