சூடு பிடித்த நடிகர் சங்கத் தேர்தல்...அதிமுக அமைச்சர்கள் எதிர்பார்ப்பில் விழுந்த மண்....

By Muthurama LingamFirst Published Jun 22, 2019, 4:34 PM IST
Highlights

’நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் தலையீடு என்பது இல்லவே இல்லை’என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தாலும் விஷால் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுகவின் எடப்பாடி தலைமையில் சில அமைச்சர்கள் முயன்றதாகவும் அது தோல்வியில் முடிந்ததால் அவர்கள் பயங்கர அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

’நடிகர் சங்கத் தேர்தலில் எங்கள் தலையீடு என்பது இல்லவே இல்லை’என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருந்தாலும் விஷால் ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுகவின் எடப்பாடி தலைமையில் சில அமைச்சர்கள் முயன்றதாகவும் அது தோல்வியில் முடிந்ததால் அவர்கள் பயங்கர அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம், தேர்தலில் விஷாலை குறிவைத்து இயங்கியவர்கள் அதில் மட்டுமே கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி பெற்றிருக்கக்கூடும். இதைவிட்டு விட்டு மொத்தமாக நடிகர் சங்கத்தையே விழுங்கப்பார்த்தார்கள். அவர்களை விழ வைத்துவிட்டது நீதி மன்றம் என்கிறது விஷால் தரப்பு.

“ஏற்கனவே ஒன்பது மாதம் லேட். இதில் மேலும் தேர்தலை தள்ளிப்போடுவதன் நோக்கம் என்ன?தற்போதைய நிர்வாகிகளுக்கு அதிகாரம் இல்லேன்னா ஒரு குழுவை போட்டிருக்கலாமே? ஒரு தேர்தலை நடத்துவது எவ்வளவு சிரமம் என்பது தெரியாதா,எவ்வளவு செலவாகும் என்பதும் தெரியாதா ?அரசு அந்த செலவை ஏற்குமா?”என்று நீதிபதி கேட்டிருக்கிறார்.
“எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்குப் பதிலாக ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் மைதானம்,அல்லது மைலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில்  நடத்தி கொள்கிறோம்.அனுமதி கொடுங்கள் ” என விஷால் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

ஆனால்  தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஜூன் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில்  நடைபெறுவதாக நடிகர் சங்கம் சார்பில் தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்ட ஒய்வு பெற்ற நீதிபதி பத்பநாபன் அறிவித்திருந்தார். 

நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் தலைமையிலான  சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடு கிறார்கள்.
தேர்தல் தொடர்பாக விஷால் தொடர்ந்த  வழக்கு நேற்று  விசாரணைக்கு வந்தது.இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஒரு உத்திரவு போட்டார்.
‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.,உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், ஏற்கனவே திட்டமிட்டபடி 23-ந் தேதி (நாளை) நடக்கும். தேர்தலுக்கான ஓட்டுச் சீட்டுகள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. ஓட்டுப்பெட்டிகளும்  சங்க அலுவலகம் வந்து சேர்ந்திருக்கிறது.

எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த அனுமதி இல்லாததால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானம் , மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளி வளாகம் ஆகிய இரு இடங்களை தேர்வு செய்து நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு சென்றார்கள். இதற்கு ஓகே சொன்ன நீதிபதிகள் “இந்த தேர்தல் நடக்கவே நடக்காது “என்று இளையவேள் ராதாரவி,’அல்வா’ எஸ்.வி.சேகர்  மற்றும் ஆளும் அதிமுகவுக்கு சிறப்பான நாமம் சாத்தியிருக்கிறார்கள்.

click me!