
நாளை நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வரைச் சந்திக்காமல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை மட்டும் சந்தித்தது ஏன் என்பது குறித்து விளக்கமளித்தார் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் நாசர்.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், தபால் வாக்குகள் வரத் தொடங்கியுள்ளன. நடிகர் சங்கத் தேர்தலில் 3 ஆயிரத்து 171 பேர் வாக்களிக்க உள்ள நிலையில், ஆயிரத்து 45 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர். தபால் வாக்கு அளிக்கும் உறுப்பினர்களுக்கு வாக்குச் சீட்டுகள் கடந்த 17ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டன.இதில், பதிவு செய்யப்பட்ட வாக்குகளை உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வருகின்றனர்.
சென்னையில் முகவரி கொண்ட உறுப்பினர்கள் நாளை வெளியூரில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம், தேர்தல் அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் அதற்கான கடிதம் கொடுத்து, வாக்குச்சீட்டுகளை தபால் மூலம் பெற்று இருக்க வேண்டும். அப்படி பெறாதவர்கள் சென்னையில் நேரில் வந்தே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு கேட்டதாக நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்தார். மேலும்நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை துணை முதல்வர் கேட்டு தெரிந்துகொண்டார். தேர்தலுக்கு பாதுகாப்பும் கோரியுள்ளோம். வேறு எதுவும் பேசவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இன்று மாலை நேரம் கேட்டுள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.