
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நாளை முதல் துவங்க உள்ளது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில், சிறந்த நடிகர் மட்டும் அல்ல, தொகுப்பாளர் என்றும் பெயர் எடுத்த, கமலஹாசன் தான் மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள, பிரபலங்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
இதனால் ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வரும் பிரபலங்களின் பெயர் பட்டியல் உண்மையா? பொய்யா என்று கூட குழம்பி உள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, தற்போது மேலும் ஒரு புதிய பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் இம்முறை மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
போட்டியாளர்களின் விவரம் இதோ:
செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு, காமெடி நடிகர் பவர் ஸ்டார், இயக்குனர் சேரன், நடிகை ஷெரின், நடிகர் கவின், நடன இயக்குனர் சாண்டி, நடிகை அபிராமி வெங்கடாச்சலம், நடிகை சாக்ஷி அகர்வால், பருத்திவீரன் சரவணன், ஜாங்கிரி மதுமிதா, மலேசியன் ஆண் மாடல், வயலின் விடுவான் மோகன் வைத்யா, மற்றும் இலங்கையை சேர்ந்த மாடல் ஒருவரும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் நாளை இரவு பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளவர்கள் பற்றி தெரிந்துவிடும் என்பது உறுதி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.