
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவிற்கும், நடிகர் விசாகனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. முதல் கணவரான அஸ்வினுக்கும், சவுந்தர்யாவிற்கும் பிறந்த மகன் வேத் கிருஷ்ணா. சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு சவால் விடும் விதமாக ஒவ்வொரு பேரன்களும் உருவாகி வருகின்றனர்.
ஒவ்வொருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ரஜினி ஸ்டைலை பிரதிபலிக்கின்றனர். ஏற்கனவே தனுஷ் மகன்களின் புகைப்படங்கள் பல சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த லிஸ்டில் தற்போது சுட்டி பையன் வேத் கிருஷ்ணாவின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!
என்னதான் பிசியான அம்மாவாக இருந்தாலும், தனது செல்ல மகன் வேத் செய்யும் குறும்புகளை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை சவுந்தர்யா ரஜினிகாந்த் தவறியதே இல்லை. சமீபத்தில் சவுந்தர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள வேத்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: வெறித்தனமா வெளுத்து வாங்கும் அஜித்... லீக்கானது "வலிமை" பைட் சீன் போட்டோ..!
அதில் வீடு முழுவதும் பவுடரை கொட்டி, ABCD எழுதி விளையாடுகிறார் சுட்டி பையன் வேத் கிருஷ்ணா. அதை பார்க்கும் நெட்டிசன்கள் யார் ரத்தம்?, தலைவர் ரத்தம் இல்ல, அப்படி தான் இருக்கும் என கமெண்ட் செய்துள்ளனர். ஏற்கனவே சூப்பர் ஸ்டாரின் செல்ல குட்டியான வேத் கிருஷ்ணாவின் சேட்டைகள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.