
Soubin Shahir dance For Monica Song : சௌபின் ஷாஹிர் தனது மகன் ஓர்ஹான் மற்றும் அவரது மருமகளுடன் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இரு குழந்தைகளும் உற்சாகமாக சௌபினுடன் சேர்ந்து நடனமாடி உள்ளனர். ரசிகர்கள் இந்த நடனத்தை ரசித்தனர். ரன்வீர் சிங்கும் இந்த வீடியோவை பார்த்து செளபின் ஷாஹிரை பாராட்டியுள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியரும் வீடியோவைப் பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் இடம்பெற்ற 'மோனிகா' பாடல் இந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்டது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடலை சுப்லாஷினி மற்றும் அனிருத் ரவிச்சந்தர் பாடியுள்ளனர். அசல் கோளார் இப்பாடலுக்கு ராப் பாடியுள்ளார். விஷ்ணு எடவன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். படத்தில் இப்பாடலில் பூஜா ஹெக்டே நடனமாடினார். அவருடன் சேர்ந்து சௌபினின் நடனமும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
சௌபின் ஷாஹிர் 'ப்ரேமம்', 'மஞ்சுமல் பாய்ஸ்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். 'மோனிகா' பாடலில் அவர் ஆடிய நடனம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' படம் செளபின் ஷாஹிருக்கு பான் இந்தியா அளவில் அந்தஸ்தை பெற்றுக்கொடுத்துள்ளது. இப்படத்தில் தயாள் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் செளபின்.
நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் 'கூலி' படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ஆகஸ்ட் 14 அன்று 'வார் 2' படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.514 கோடி வசூலித்து, இந்த ஆண்டு அதிக வசூல் அள்ளிய தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்திருந்தது. கூலி படத்தின் வெற்றியை தொடர்ந்து செளபின் ஷாஹிருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.