
Lavanya Tripathi Welcome Baby Boy : வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ளது. இன்று (புதன்கிழமை) ஹைதராபாத்தில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் லாவண்யா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். இந்த மகிழ்ச்சியான செய்தி வெளியானதும், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, சிரஞ்சீவி தனது புதிய படத்தின் படப்பிடிப்பிலிருந்து நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று வருண் - லாவண்யா தம்பதிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். ராம் சரண், உபாசனா ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி தம்பதியின் குழந்தையை “மெகா வாரிசு” என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஆண்டு தன்னுடைய மனைவி லாவண்யா கர்ப்பாமாக இருக்கும் தகவலை வருண் தேஜ் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், இன்று அந்த ஜோடிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
வருண் தேஜ், நாகபாபுவின் மகன். லாவண்யா திரிபாதி 'அந்தால ராட்சசி' படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் சசிகுமார் ஜோடியாக பிரம்மன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்த லாவண்யா, வருண் தேஜுக்கு ஜோடியாக நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.