
Middle Class Movie : சமீப காலமாக தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் தான் குடும்பஸ்தன், 3 BHK, டூரிஸ்ட் பேமிலி ஆகிய படங்கள். இப்போது இந்தப் படங்களின் வரிசையில் புதிதாக இடம் பெறும் படம் தான் மிடில் கிளாஸ். முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் இஎம்ஐ, வட்டி, மாத வாடகை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் காமெடி கலந்த எமோஷனல் படமாக உருவாகி வருகிறது.
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு பார்த்து கணக்கு பார்த்து வாழும் சாமானியனின் வாழ்க்கையை கொண்ட படம் தான் மிடில் கிளாஸ். ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் ஏதாவது ஒரு ஸ்டேஜில் கஷ்டத்தை கடந்து வந்திருப்பார்கள். இந்தப் படத்தில் முனீஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி இருவரும் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.
வளர்ந்து வரும் திறமையாளர்களைக் கண்டறிவதில் பெயர் பெற்ற மறைந்த தயாரிப்பாளர் டில்லி பாபுவால் நம்பிக்கைக்குரிய கதையாக இந்த படம் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்டது. அவருடைய நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக 'மிடில் கிளாஸ்' படக்குழு சிறந்த முறையில் பணியாற்றியுள்ளது.
இந்தப் படத்தை இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார். தேவ் மற்றும் கே.வி. துரை இருவரும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.