பாறைகள் மேல் வெறித்தன ஒர்கவுட் செய்யும் சூரி.. படப்பிடிப்பு தளத்தில் உடற்பயிற்சி வீடியோ!!

Kanmani P   | Asianet News
Published : Jun 11, 2022, 12:57 PM IST
பாறைகள் மேல் வெறித்தன ஒர்கவுட் செய்யும் சூரி.. படப்பிடிப்பு தளத்தில் உடற்பயிற்சி வீடியோ!!

சுருக்கம்

விடுதலையின் படப்பிடிப்பு தளத்தில் சூரியின் உடற்பயிற்சி வீடியோ ஆன்லைனில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

உச்ச நட்சத்திரங்களுக்கு நண்பனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சூரி. இவரின் காமெடிக்கு சென்ஸ் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரசிக்க வைத்தது. அதிக படங்களில் கமிட்டாகும் காமெடியனாக அந்தஸ்தை பெற்றதை அடுத்து..வழக்கம் போல நாயகன் அவதாரம் எடுக்க விரும்பிய சூரிக்கு வெற்றி மாறன் முதல் வாய்ப்பை வழங்கினார். தனக்கென தணிப்பானையை அமைத்துக்கொண்டு அசுரன் என்னும் மகத்தான படைப்பை திரை உலகிற்கு தந்து தேசிய விருதை குறிகிய காலத்தில் வென்றவர் வெற்றி மாறன். இவரின் படைப்புகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருக்கும். இவர் தற்போது சூரியின் விடுதலை, சூர்யாவின் வாடிவாசல் உள்ளிட்ட திட்டங்களில் பயணித்து வருகிறார்.

வருடங்களை கடந்தும் படப்பிடிப்பில் இருக்கும் விடுதலைக்காக திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. பலமுறை ஒத்தி வைப்பிற்கு பிறகு தற்போது இறுதி படப்பிடிப்பில் உள்ளது விடுதலை. இந்த ஆண்டு இறுதிக்குள் வாடிவாசல் படத்தை துவங்க வேண்டியுள்ளதால் . விடுதலையை விரைவில் முடித்து கொடுக்க ஒரே மூச்சாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இயக்குனர். நாயகன் ஆவது அவ்வளவு எளிதான விடயம் கிடையாது என்பதை நன்கறிந்த சூரி தன்னை தானே சிற்பமாய் செதுக்கியுள்ளார். ஏற்கனவே சீமைராஜா படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த சூரி தற்போது ஹாலிவுட் ஆக்சன் ஹீரோஸ் போல கட்டுடலை மெய்ன்டன் செய்து வருகிறார்.அந்த வகையில் விடுதலை படப்பிப்பிடிப்பு தளத்தில் பாறைகளுக்கு மேல் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார் சூரி. வீடியோவைப் பகிர்ந்துள்ள நடிகர், "நீங்கள் எந்த இடத்திலும் எதையும் செய்யலாம். என குறிப்பிட்டுள்ளார்.

 இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கிறார் . இந்த ஆண்டு கோலிவுட் திரையுலகினர் பெரிதும் எதிர்பார்க்கும் படங்களுள் இதுவும் ஒன்று .  தற்போது சூரி ஷூட்டிங் லொகேஷனில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025 பாக்ஸ் ஆபிஸில் ஓப்பனிங் கிங் யார்? முதல் நாள் அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ
பாலய்யாவின் மாஸ் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டாக இருந்ததா? அகண்டா 2 விமர்சனம் இதோ