
பாப் இசைப் பாடல்களைப் பாடி பிரபலமான பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 28 வயதே ஆகும் இவர் கனடாவின் டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்காக தயாராகி வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஜஸ்டின் பீபர் தான் 'ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம்' (Ramsay Hunt Syndrome) என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வைரஸ் தாக்குதலால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது: ராம்சே ஹன்ட் சிண்ட்ரோம் பாதிப்பால் என் முகத்தின் ஒரு பக்கம் செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது. அதேசமயம் படிப்படியாக கேட்கும் திறனையும் இழக்கும் ஆபாயமும் உள்ளது.
என் மூக்கு, வாய் ஆகியவற்றை ஒரு பக்கம் சுத்தமாக அசைக்க முடியவில்லை. அதனால், டொரண்டோவில் நடைபெற இருந்த இசை நிகழ்ச்சியை நான் ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாகத் தான் இருக்கும்.
ஆனால் என்னால் உடல்ரீதியாக, செயல்பட முடியவில்லை, அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளேன். இதிலிருந்து மீள முகத்திற்கு தேவையான பயிற்சிகளை எடுத்து வருகிறேன். ஓய்வு தேவைப்படுகிறது. நிச்சயம் 100 சதவீதம் முழுமையாக திரும்பி வருவேன் என்கிற நம்பிக்கை உள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம்... விக்ரமுக்கு போட்டியாக ரிலீசாகி பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய பாலிவுட் படம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.