காலணியுடன் போட்டோஷூட்… சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா… விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்!!

Published : Jun 11, 2022, 12:00 AM IST
காலணியுடன் போட்டோஷூட்… சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா… விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்!!

சுருக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதியில் காலணியுடன் சென்றதாக நயந்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீது சர்ச்சை எழுந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் சென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையான் கோவில் சன்னதியில் காலணியுடன் சென்றதாக நயந்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் மீது சர்ச்சை எழுந்த நிலையில் விக்னேஷ் சிவன் காலணியுடன் சென்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார். மகாபலிபுரம் கடற்கரையில் நேற்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி போட்டோசூட் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி பால்ரெட்டி, ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர், கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய அளவில் போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் ஏழுமலையான் கோவில் முன் போட்டோஷூட் நடத்தியது கிடையாது.

எனவே இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவறி விட்டனர். எனவே அதற்கான காரணம் பற்றி அங்கு இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த நிலையில் இதுக்குறித்து விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எங்கள் திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அது சாத்தியமில்லாததால் சென்னையில் எங்கள் திருமணத்தை நடத்த வேண்டியிருந்தது. எங்கள் திருமணத்தை முடித்த கையோடு வீட்டிற்கு செல்லாமல் சாமி கல்யாணத்தை பார்க்கவும், நாங்கள் மிகுந்த பக்தி கொண்ட பாலாஜியின் ஆசிர்வாதத்தைப் பெறவும் நேரடியாக திருப்பதிக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அற்புதமான தரிசனம் செய்தோம்.

இந்த நாள் எங்கள் நியாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு வெளியே ஒரு புகைப்படம் எடுத்து அதை எங்கள் விருப்பப்படி இங்கே திருமணம் முடிந்துவிட்டது என்று உணர்வை பெற விரும்பினோம், ஆனால் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக நாங்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் சலசலப்பு குறைந்த நேரத்தில் உள்ளே நுழைந்து விரைந்து படம் எடுக்கும் அவசரத்தில், நாங்கள் எங்கள் காலணிகளை அணிந்திருந்ததை உணரவில்லை. நாங்கள் தொடர்ந்து கோவில்களுக்குச் செல்லும் தம்பதிகள், கடவுள் மீது அபரிமித நம்பிக்கை கொண்டவர்கள். கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருமலைக்குச் சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம். எங்களால் புண்படுத்தப்பட்டவர்களிடம் நாங்கள் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் நாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் இல்லை. எங்கள் சிறப்பு நாளுக்காக அனைவரிடமிருந்தும் நாங்கள் பெற்ற அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் உங்களிடமிருந்து எங்களுக்குத் தேவையான நேர்மறையை மட்டுமே நீங்கள் தொடர்ந்து எங்களுக்கு வழங்குவீர்கள் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!