இயற்கையோடு பயணிக்கும் 'ட்ராவல்ல ஒரு காதல்'... ழகரம் இயக்குனரின் அடுத்த படைப்பு!

Published : Jun 11, 2022, 12:02 PM IST
இயற்கையோடு  பயணிக்கும் 'ட்ராவல்ல ஒரு காதல்'... ழகரம் இயக்குனரின் அடுத்த படைப்பு!

சுருக்கம்

Travel la oru kadhal : யணத்தில் பிறந்த காதல் கதைக்களம் கொண்ட படங்கள் பல இருந்தாலும், இப்படம் இயற்கையோடு கூடிய, இதுவரை கண்டிராத ஒரு படமாக இருக்கும் என இயக்குனர் க்ரிஷ் தெரிவித்துள்ளார்.

காதல் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரி தான். ஆனால் ஒவ்வொருவரின் காதல் அனுபவங்களும் வேறு, அப்படி பல வித்தியாசமான காதல் கதைகள் குறித்த படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 'ழகரம்' பட இயக்குனர் க்ருஷ் தன்னுடைய அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
 
இவரின் முதல் படைப்பான 'ழகரம்' திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய அளவிற்கு வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது. அதே போல் தமிழ் அருமை, அதன் தொன்மையை எடுத்து கூறி தன்னுடைய முதல் படத்திலேயே, பலரையும் யோசிக்க வைத்திருந்தார் க்ரிஷ் . கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்க தயாராகியுள்ள க்ரிஷ். தன்னுடைய வாழ்க்கையிலும், தான் பார்த்து வியர்ந்த சுவாரஸ்யமான அனுபவங்களை வைத்து இந்த காதல் கதையை உருவாக்கியுள்ளார் க்ரிஷ். இப்படம் அனைவரும் கடந்து வந்த பாதையை, நிச்சயம் நினைவூட்டும் வகையிலும், நெஞ்சை தொடும் வகையிலும் இருக்கும் என தெரிவித்துள்ளார். ஒரு பயணத்தில் உருவாகும் காதலை மிகவும் சுவாரஸ்யமாக இப்படத்தின் மூலம் கூறவுள்ளார். அதற்க்கு பொருத்தமாக டைட்டிலையும் இந்த படத்திற்கு தேர்வு செய்துள்ளார்.

இதற்க்கு முன்னர் பயணத்தில் பிறந்த காதல் கதைக்களம் கொண்ட படங்கள் பல இருந்தாலும், இப்படம் இயற்கையோடு கூடிய, இதுவரை கண்டிராத 'ட்ராவலில் ஒரு காதலாக' இருக்கும் என இயக்குனர் க்ரிஷ் தெரிவியுள்ளார். சமீபத்தில் கூட காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ட்ராவலில் ஒரு காதலும் வெற்றிவாகை சூடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

'டிராவல்ல ஒரு காதல்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு, அஜய் இசையமைக்க உள்ளார். தீபக் குமார் ஒளிப்பதிவில், இந்த படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுத உள்ளனர் கவா கம்ஸ் மற்றும் ரேகா மூர்த்தி, பல வெற்றி படங்களில் தன்னுடைய இனிமையான பாடல் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த, வைக்கோம் விஜயலக்ஷ்மி இப்படத்தில் மிக சிறந்த உணர்வு பூர்வமான பாடல் ஒன்றை பாடியுள்ளார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்கிறது தேசாந்திரி புரொடெக்ஷன்ஸ் மற்றும் டிகே மீடியா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Justin Bieber : முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்தது... பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு என்ன ஆச்சு?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!