பேமிலி ஆடியன்ஸை கவர ரெடியான சூரி; வைரலாகும் மாமன் டிரெய்லர்

Published : May 01, 2025, 01:47 PM IST
பேமிலி ஆடியன்ஸை கவர ரெடியான சூரி; வைரலாகும் மாமன் டிரெய்லர்

சுருக்கம்

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Maaman Movie Trailer Released : தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்தவர் சூரி. இவர் கடந்த 2023-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படத்தில் சூரியின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. விடுதலை படத்தின் வெற்றிக்கு பின்னர், சூரிக்கு காமெடி வேடங்கள் சுத்தமாக வருவதில்லை. இதனால் முழுநேர ஹீரோ ஆகிவிட்டார் சூரி. விடுதலைக்கு பின் அவர் ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி, கருடன் ஆகிய படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

சூரியின் மாமன்

இந்நிலையில், சூரி ஹீரோவாக நடிக்க உருவாகி வரும் புதிய படம் மாமன். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் விமல் நடித்த விலங்கு என்கிற வெப் தொடரை இயக்கி இருந்தார். மாமன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்துள்ளார். மேலும் ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பால சரவணன், விமல், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

ஃபேமிலி படம்

இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் வன்முறை படங்கள் தான் வெளிவருகின்றன. அதை விட்டால் பேய் படங்கள் வருகிறது. பக்கா ஃபேமிலி படங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களின் பாணியில் சூரி நடித்துள்ள படம் தான் மாமன். இப்படம் வருகிற மே 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாமன் டிரெய்லர் ரிலீஸ்

மாமன் பட டிரெய்லர் மூலம் இதில் ஒரு தாய்மாமனின் உறவைப் பற்றி ஆழமாக பேசும் படமாக இது இருக்கும் என்பது தெரிகிறது. இப்படத்தில் சூரியின் தங்கையாக நடிகை ஸ்வாசிகா நடித்துள்ளார். காதல், காமெடி, பேமிலி செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு பக்கா ஃபேமிலி படமாக இந்த மாமன் திரைப்படம் இருக்கும் என்பது அதன் டிரெய்லர் மூலமே தெரிகிறது. இப்படம் மூலம் நடிகர் சூரி ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!