படமாகிறது அற்புதம் அம்மாளின் வாழ்க்கை… வைரலாகும் வெற்றிமாறன் வீடியோ!!

Published : May 18, 2022, 09:57 PM IST
படமாகிறது அற்புதம் அம்மாளின் வாழ்க்கை… வைரலாகும் வெற்றிமாறன் வீடியோ!!

சுருக்கம்

பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாவின் போராட்ட வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருப்பது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாவின் போராட்ட வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருப்பது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், நல்லவர்கள் வாழ வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனது போராட்டம் தனிப்பட்ட போராட்டமல்ல. சிறை வாழ்க்கையின் போது தமிழர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தி என் தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நினைத்தார்கள். முப்பது ஆண்டுகாலம் என்னுடன் இருந்த அத்தனை தமிழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அம்மாவின் தியாகம் மற்றும் சட்டப் போராட்டம் மற்றும் என் குடும்பத்தினரின் கிடைத்த வெற்றி தான் இந்த தீர்ப்பு.

என் அம்மா ஆரம்ப காலங்களில் அவமானங்கள், புறக்கணிப்புகளை சந்தித்து இருந்தார். இந்த வேதனைகளை கடந்த 31 ஆண்டுகள் இடைவிடாமல் போராடி இருந்தார்கள். என் தாய் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எனக்காகவே அர்ப்பணித்து இருக்கிறார். மேலும், தங்கை செங்கொடியின் அர்ப்பணித்து தியாகம் அளப்பரியது. எனது விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் உதவியிருக்கிறார்கள். என் விடுதலைக்காக போராடிய அனைவரையும் நேரம் கிடைக்கும் போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து பேசிய அவர், பேரறிவாளனின் அம்மா அற்புதம்மாளின் வாழ்க்கையை படமாக்க விரும்புகிறேன். ரொம்ப மும்முரமாக அதில் வொர்க் பண்ணிட்டு இருக்கிறேன். ஒரு தாயின் போராட்டம், நாட்டினுடைய வரலாறும் இருக்கு. 32 காலமாக நடக்கும் ஒரு அம்மாவுடைய போராட்டத்தை காட்சிப்படுத்துகிறது. ரொம்ப சவாலானது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. அற்புதம் அம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை கூட முடிவு பண்ணி வைத்திருக்கிறேன். சீக்கிரம் சொல்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோவை பேரறிவாளயான பிறகு வெளியாகியுள்ளது. இதனை அடுத்து வெற்றிமாறன் அற்புதம் அம்மாளின் படத்தை கூடிய விரைவில் இயக்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!