Yashika Aannand: அச்சச்சோ...யாஷிகா ஆனந்திற்கு என்னாச்சு..? கதறி அழும் வீடியோ பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்..

Anija Kannan   | Asianet News
Published : May 18, 2022, 04:58 PM IST
Yashika Aannand: அச்சச்சோ...யாஷிகா ஆனந்திற்கு என்னாச்சு..? கதறி அழும் வீடியோ பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்..

சுருக்கம்

Yashika Aannand Video: மாடல் அழகி யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் கதறி அழும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 

மாடல் அழகி யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் கதறி அழும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். 
 
கவர்ச்சி கன்னி யாஷிகா பயணம்:

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஓவர் கவர்ச்சி காட்டி இளம் ரசிகர்களை கொள்ளை கொண்டார். 

கவர்ச்சி கன்னியாக வலம் வரும், யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்க ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய படங்களில் நடித்தார். 

பிக் பாஸ் யாஷிகா:

இருப்பினும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் இவருக்கு மிக பெரிய அளவில் ரீச் கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் நடித்துள்ளார்.

கார் விபத்தில் சிக்கிய யாஷிகா ஆனந்த்:

கடந்த ஆண்டு, யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கினார். இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது முழுவதுமாக உடல்நிலை தேறியுள்ள யாஷிகா மீண்டும் இணையத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 

வைரலாகும் கதறி அழும் வீடியோ:

இதையடுத்து, தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சில படங்களிலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில், யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் கதறி அழும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதுக்கு இப்படி கதறி அழுகிறீர்கள். உங்கள் நண்பர்களும் எதற்காக அழுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!