தடபுடலாக நடந்த புதுவீடு கிரஹப்பிரவேஷம்; ராஜமரியாதை செய்த நண்பனுக்கு சினேகன் - கன்னிகா ஜோடி தந்த இன்ப அதிர்ச்சி

By Ganesh A  |  First Published Jun 7, 2024, 11:05 AM IST

கவிஞர் சினேகன் தன்னுடைய மனைவி கன்னிகா உடன் புது வீடு கிரஹப்பிரவேசத்தில் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார். கவிஞர் சினேகனுக்கும் அவரது நீண்ட நாள் காதலியான கன்னிகாவுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. சினேகனின் மனைவி கன்னிகாவும் சினிமா மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்திருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு சீரியல் மூலம் அறிமுகமான கன்னிகா, அதன்பின்னர் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருந்தார். தற்போது இன்ஸ்டாவில் பாப்புலராக இருக்கும் கன்னிகா, அதில் அடிக்கடி வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். குறிப்பாக குடும்பத்தினருடன் ஜாலியாக கூடி பேசி அரட்டை அடிக்கும் வீடியோக்கள் வேற லெவலில் ரீச் ஆனது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... Star : பில்டப் இன்றி சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது கவினின் ஸ்டார் திரைப்படம்... அதுவும் இந்த ஓடிடி தளத்திலா?

அதிலும் ஒரு வீடியோவில் குடும்பத்தினர் அனைவரிடமும் செல்போனை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, ஒரே அறையில் பாய் விரித்து அனைவரும் ஒன்றாக கூடி பேசி மகிழ்ந்தபடி தூங்கும் வீடியோவுக்கு மில்லியன் கணக்கில் வியூஸும் வந்தது. அந்த வகையில் தற்போது புது வீட்டு கிரஹப்பிரவேஷம் ஒன்றில் கலந்துகொண்டபோது எடுத்த வீடியோவை சினேகன் மனைவி கன்னிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அது அவர்களது 25 வருடன் நண்பர் ஒருவரின் வீட்டு கிரஹப்பிரவேஷமாம். அதில் கலந்துகொள்ள வந்த சினேகனுக்கு பரிவட்டம் கட்டி ராஜமரியாதை கொடுக்கப்பட்டது. தனக்கு ராஜமரியாதை கொடுத்த நண்பனுக்கு ஊரே மெச்சும் அளவுக்கு மேள தாளத்துடன் சீர் கொண்டு வந்து கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சினேகன். அந்த நிகழ்வின் போது எடுத்த வீடியோவை தான் கன்னிகா தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... அன்று குடும்ப கஷ்டத்தால் துபாய்க்கு வேலைக்கு சென்ற விஜய்சேதுபதி; இன்று மகாராஜாவாக Burj Khalifa-ல ஜொலிக்கிறார்

click me!