Kalki 2898 AD Trailer: கல்கி 2898 AD திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட தகவல்!

Published : Jun 06, 2024, 04:44 PM IST
Kalki 2898 AD Trailer: கல்கி 2898 AD திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட தகவல்!

சுருக்கம்

இந்தியாவெங்கும் ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் & திஷா பதானி ஆகியோர் நடித்துள்ள “கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10, 2024 அன்று வெளியிடப்படவுள்ளது. அமேசான் பிரைமில் புஜ்ஜி & பைரவா என்ற தலைப்பில், படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்  அனிமேசன் வீடியோ வெளியான பிறகு, உலகம் முழுவதிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன பிரபலத்தை பழிவாங்கிட்டேன்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கூறிய ஷாக்கிங் தகவல்!

டிரெய்லர் வெளியீட்டு தேதி, சுவாரஸ்யமான ஒரு புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது, அந்த போஸ்டரில்,  ஒரு மலையின் உச்சியில் பைரவவான பிரபாஸ் நிற்கிறார், “எல்லாம் மாறப்போகிறது” என்ற வாசகம் அதில் உள்ளது.

கல்கி 2898 கிபி படத்தில், இந்திய அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான  நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடிப்பதால் இந்தியா மட்டுமல்லாது  சர்வதேச அளவில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்
பாக்ஸ் ஆபிஸ் ‘பாட்ஷா’ ரஜினிகாந்த் நடித்து அதிக வசூல் அள்ளிய டாப் 7 மூவீஸ் ஒரு பார்வை