- Home
- Gallery
- அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன பிரபலத்தை பழிவாங்கிட்டேன்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கூறிய ஷாக்கிங் தகவல்!
அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன பிரபலத்தை பழிவாங்கிட்டேன்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கூறிய ஷாக்கிங் தகவல்!
அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்ன பிரபலத்தை பழிவாங்கி விட்டேன் என 'சிறகடிக்க ஆசை சீரியல்' நாயகி ப்ரீத்தா கூறியுள்ள தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமீப காலமாகவே பல திரைப்பட நடிகைகள் மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் தொடர்ந்து அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசுகின்றனர். சிலர் சின்னத்திரையில் அட்ஜஸ்ட்மென்ட் இல்லை என கூறினாலும், எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் சின்னத்திரைக்குள் நுழையும் சில நடிகைகளை டார்கெட் செய்து ஒரு சிலர், அட்ஜஸ்ட்மென்ட் கேட்பதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அனைத்து வேலைகளிலுமே இருந்தாலும் கூட, சினிமா துறையில் தான் அதிகம் என்பது பலரது கருத்தாக உள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி, சமீப காலமாக மற்ற மாநில நடிகைகளை விட தமிழ் நடிகைகளும் வெள்ளி திரையிலும், சின்னத்திரையிலும் அதிகம் கால் பதித்து நடிக்க துவங்கியுள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா சீரியலில் அக்ஷயா கதாபாத்திரத்திலும், சிறகடிக்க ஆசை சீரியலில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ப்ரீத்தா தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சீரியலுக்கான ஆடிஷன் ஒன்றில் பிரீத்தா கலந்து கொண்ட போது, அவரிடம் பிரபலம் ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பிரீத்தா அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் நடிக்க வேண்டும் என்கிற அவசியம் தனக்கு கிடையாது என முகத்துக்கு நேராகவே சொல்ல, அந்த பிரபலம் அப்போ நீ எதுக்கு நடிக்க வர.. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியலன்னா நடிக்கிறதுக்கு தகுதியே இல்ல என்று சொல்லி அனுப்பி இருக்கிறார். உடனே அந்த வாய்ப்பே வேண்டாம் என அங்கிருந்து கிளம்பி விட்டாராம் ப்ரீத்தா.
ஆனால் தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்த பிரீத்தாவுக்கு, சில சீரியல்களில் போன் செய்து நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளனர். அதன்படி ஆடிஷனில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை நிரூபித்த பிரீத்தா, தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இரண்டு சீரியல்களில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.
தொடர்ந்து பேசிய பிரீத்தா, நான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால்தான் நடிக்க முடியும் என்று சொன்ன அந்த பிரபலத்திற்கு இப்போது அப்படி எதுவும் செய்யாமலேயே... திறமை இருந்தால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்து அவரை பழி வாங்கி விட்டேன். அவர் என்னுடைய வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரை என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து பிளாக் செய்து விட்டேன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த தைரியத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.