- Home
- Gallery
- Star : பில்டப் இன்றி சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது கவினின் ஸ்டார் திரைப்படம்... அதுவும் இந்த ஓடிடி தளத்திலா?
Star : பில்டப் இன்றி சைலண்டாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது கவினின் ஸ்டார் திரைப்படம்... அதுவும் இந்த ஓடிடி தளத்திலா?
இளன் இயக்கத்தில் கவின் ஹீரோவாக நடித்த ஸ்டார் திரைப்படம் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி உள்ளது.

Kavin
சிவகார்த்திகேயனை போல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சக்சஸ்புல் நடிகராக வலம் வருபவர் கவின். தற்போது கோலிவுட்டில் பிசியான ஹீரோவாகவும் கவின் வலம் வருகிறார். இவர் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளன. தற்போது நெல்சன் தயாரிக்கும் பிளெடி பெக்கர், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கும் கிஸ் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் கவின். இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வர உள்ளன.
star movie kavin
இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா உடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் கவின். இதுதவிர லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் அப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்க உள்ளதாம்.
இதையும் படியுங்கள்... முடியும் நேரத்தில் டிஆர்பி-யில் தூள் கிளப்பும் எதிர்நீச்சல் - இந்த வார டாப் 10 சீரியல்களின் லிஸ்ட் இதோ
Star Movie OTT Release
மேலும் சில்லுனு ஒரு காதல் படத்தின் இரண்டாம் பாகம், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இரண்டாம் பாகம் ஆகியவற்றிலும் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படி கைவசம் அரை டஜன் படங்களும் பிசியான நடிகராக வலம் வரும் கவின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம். ஸ்டார். இப்படத்தை பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இப்படம் மே 10-ந் தேதி திரைக்கு வந்தது.
Star Movie Released on Amazon Prime
ஸ்டார் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததால் இப்படத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்ததால், ஒரே வாரத்தில் அதன் ஓட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஸ்டார் திரைப்படம் இன்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஓடிடியில் இப்படத்திற்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... Ajith : பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்ட சரித்திர படத்துக்காக... முதன்முறையாக இணைகிறதா அஜித் - ஷங்கர் கூட்டணி?