
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களுக்கு, ரசிகர்களை கவரும் விதத்தில் பாடல்கள் எழுதி பிரபலமானவர் சினேகன். இவர் எழுத்தில் உருவான "அவரவர் வாழக்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்', 'தோழா தோழா தோல் கொடு கொஞ்சம்', 'கல்யாணம்தான் கட்டி கிட்டு ஓடிப்போலாமா', 'பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை', 'ஆராரிராரோ', போன்ற பாடல்கள் தற்போது வரை பல ரசிகர்களால் தினமும் அதிகம் கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாக இல்லது.
பாடலாசிரியர் என்பதை தாண்டி, 'யோகி', 'உயர்திரு 420', 'கோமாளி' , 'பூமி', 'யானை' போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதே போல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடிய சினேகன், சில விமர்சனங்களுக்கு ஆளானாலும், முதல் ரன்னரப்பாக மாறினார்.
இந்நிலையில் சினேகன் சீரியல் நடிகை ஜெயலட்சுமி மீது கொடுத்துள்ள புகாரை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். சீரியல் நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, தனது பெயரில் இயங்கி வரும் அறக்கட்டளையை வைத்து பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு சினேகன் தரப்பில் இருந்து, ஜெயலட்சுமியிடம் தொலைபேசி வாயிலாக பேசிய பொது, இதுகுறித்து அவர் எந்த ஒரு பதிலும் தரவில்லை என கூறப்படுகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து சீரியல் நடிகை ஜெயலட்சுமி தரப்பில் இருந்தும் சினேகன் மீது புகார் கொடுக்கப்பட்டது. அப்போது சினேகனின் இந்த புகார் முற்றிலும் பொய்யாக ஜோடிக்கப்பட்டது என காவல் நிலையத்தில் ஜெயலக்ஷ்மி புகார் அளிக்க சென்றபோது, போலீசார் இவரது புகாரை ஏற்க மறுத்ததாகவும், இதை தொடர்ந்து நீதி மன்றத்தை நாடிய ஜெயலக்ஷ்மிக்கு சாதகமாக, சினேகன் மீது FIR பதிய, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் சினேகன் தரப்பில் இருந்து தன் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என, ஜெயலட்சுமி கூறிய நிலையில் இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுத்துள்ளது.
சிநேகன்... ஜெயலட்சுமி மீது கொடுத்த புகாரை தொடர்ந்து திருமங்கலம் போலீசில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.