
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் திரையரங்கில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது அந்த வகையில் தற்போது ட்ரைலர் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்: வேதனையாக இருக்கிறது... சமந்தாவுடன் விவாகரத்தா? முதல் முறையாக மௌனம் களைத்த நாக சைதன்யா!!
'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்துள்ளது.
ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் மற்றும் so baby ஆகிய பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 'டாக்டர்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். என்றும் பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய படக்குழுவினர். பின்னர் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்: விரைவில் முடிவுக்கு வருகிறது ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்..!! இது தான் காரணமா?
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால், தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லாமலேயே இருந்து வருகிறது. பின்னர் திரையரங்கில் வெளியிடும் முயற்சியை படக்குழு கைவிட்டு விட்டு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியை எடுத்து வந்த நிலையில், மீண்டும் திரையரங்கில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியானது.
மேலும் செய்திகள்: கிழிந்த பேன்ட் அணிந்து படு மாடர்னாக ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ்!! இவர் மாட்டிருக்கும் பேக் இத்தனை லட்சமா?
எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் நாளை ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ட்ரைலர் வெளியாவதற்கு முன்பே இதனை, சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.