நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சு தம்பி! ஸ்டண்ட் காட்சிகளில் பொறி பறக்கவிடும் அஜித்.. Glimpse வீடியோ..

Published : Sep 23, 2021, 07:28 PM IST
நான் கேம் ஆரம்பிச்சி ரொம்ப நேரம் ஆச்சு தம்பி! ஸ்டண்ட் காட்சிகளில் பொறி பறக்கவிடும் அஜித்.. Glimpse வீடியோ..

சுருக்கம்

தல அஜித் (Ajith) நடிப்பில், உருவாகியுள்ள வலிமை (Valimai Movie)  படத்தின் glimpse வீடியோ இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்று முன்னர் இந்த வீடியோ வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில், அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் 'வலிமை'. 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதால், இவரது இரண்டாவது படமான இந்த படத்தின் மீதும் ஏகோபித்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கிறார்.

மேலும் செய்திகள்: கிழிந்த பேன்ட் அணிந்து படு மாடர்னாக ஏர்போர்ட் வந்த கீர்த்தி சுரேஷ்!! இவர் மாட்டிருக்கும் பேக் இத்தனை லட்சமா?

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணிகளும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்களை, படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடம் மற்றும் ரிலீஸ் தேதி ஆகிய தகவல் வெளியானதை தொடர்ந்து, இன்றைய தினம் இந்த படத்தின் glimpse வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக அஜித் ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்த நிலையில், சற்று முன்னர்... சுமார் பொறி பறக்க, அஜித் பைக்கில் தாறுமாறாக ஸ்டண்ட் காட்சியில் அசத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் தனி அழகு... ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா!!

 

ஹாலிவுட் படத்திற்கு இணையான ஆக்சன் காட்சிகள், மற்றும் தரமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது எடுத்ததுமே... 'நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள், சாத்தானின் அடிமைகள் நாங்கள், இருள் வலைதான் எங்கள் உலகு, அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்? என்ற வசனம் வேறு லெவலுக்கு உள்ளது. அஜித் மிகவும் ஸ்டைலிஷாக நான் கேம் ஆரம்பிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி என கூறுவது... சும்மா தெறிக்க விடுகிறது.

மேலும் செய்திகள்: முதுகு முழுசா தெரியுதே... வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் தெறிக்கவிடும் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி!!

 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும்  இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டீசர், இந்த வாரம் வெளியாகும் என்கிற தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!