15 வருடத்திற்கு பின் துவங்கியது 'தலைநகரம் 2 '..! மீண்டும் ஹீரோ அவதாரம் எடுத்த சுந்தர்.சி..!

By manimegalai aFirst Published Sep 23, 2021, 3:21 PM IST
Highlights

நடிகர் சுந்தர்.சி (Sundar C ) பல வெற்றி படங்களை இயக்கி இருந்தாலும், இவரை ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது 'தலைநகரம்' (Thalainagaram) திரைப்படம் தான். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சுந்தர்.சி நடிக்க உள்ளார்.

சுந்தர் சி இயக்கியுள்ள 'அரண்மனை 3 ' (Aranmanai 3 ) திரைப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், தற்போது மீண்டும் சுந்தர் சி ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம் குறித்த தகவல் வெளியாகி, ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: வாணி போஜனை கட்டி அணைத்தபடி அமர்ந்திருக்கும் விக்ரம்! அப்போ துருவுக்கு ஜோடி இல்லையா? வைரலாகும் போட்டோஸ்..

 

2006 ஆம் ஆண்டு சுந்தர் சி, ஜோதிமயி, மற்றும் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில், டி. இமான் இசையில் வெளியான திரைப்படம் 'தலைநகரம்'. இப்படம் பிரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'அபிமன்யு' படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்: முதுகு முழுசா தெரியுதே... வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் தெறிக்கவிடும் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி!!

 

குறிப்பாக இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம், நடிகர் வடிவேலுவின் காமெடி என கூறலாம். தன் ஊரிலிருந்து நடிகை த்ரிஷாவை திருமணம் செய்யும் லட்சியத்தோடு சென்னை வரும் நாய் சேகர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் வடிவேலு. பின்னர் கதாநாயகியிடம் முகத்தை காட்டியே மயக்கம் போட செய்வது, மற்றும் சுந்தர் சி - வடிவேலு காம்பினேஷன் திரையரங்கத்தையே சிரிப்பொலியால் மூழ்கடித்தது.

'நாய் சேகர்' கதாபாத்திரம் மிகப்பெரிய ரீச் பெறவே, மீண்டும் வடிவேலுவை வைத்து, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்கிற படத்தை சுராஜ் இயக்கி வருவது ஒரு புறம் இருக்க, சுந்தர் சி -யும் சுமார் 15 வருடங்களுக்கு பின் மீண்டும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை வி.இசட் துரை என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

click me!