சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' ட்ரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!!

By manimegalai aFirst Published Sep 22, 2021, 8:17 PM IST
Highlights

சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடித்து முடித்துள்ள 'டாக்டர்' (Doctor Movie) திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் திரையரங்கில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது அந்த வகையில் தற்போது ட்ரைலர் வெளியீட்டு தேதியையும் படக்குழு அறிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: பற்றி எரியும் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்.!! ஜீவனாம்சமாக இவ்வளவு பெரிய தொகையா?

 

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்‌ஷனும் தயாரித்துள்ளது.

ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் வெளியாகி யூ-டியூப்பில் 125 மில்லியன் வியூஸ்களை கடந்தது. அதேபோல்  so  baby  பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'டாக்டர்' ஏற்கனவே மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 'டாக்டர்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் வர இருப்பதால் பட வெளியீட்டை தள்ளிவைக்கிறோம். என்றும் பட வியாபாரம், தேர்தல், ரசிகர்களை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறிய படக்குழுவினர். பின்னர் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா? போட்டியாளர்கள் குறித்த முழு விவரம் இதோ..!!

 

ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்ததால், தற்போது படம் வெளியாவது சாத்தியம் இல்லாமலேயே இருந்து வருகிறது. பின்னர் திரையரங்கில் வெளியிடும் முயற்சியை படக்குழு கைவிட்டு விட்டு, ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியை எடுத்து வந்த நிலையில், மீண்டும் திரையரங்கில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகும் என்கிற அறிவிப்பு வெளியானது.

மேலும் செய்திகள்: 25 வயது இளம் நடிகை காதலருடன் கார் விபத்தில் அதிர்ச்சி மரணம்..!! திரையுலகில் பரபரப்பு..!!

 

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் கவனம் செலுத்தி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் 27-ஆம் தேதி இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

click me!