
இது புரட்டாசி மாதம் என்பதால் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களுக்கு செல்வதை பத்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பிட்ட நாட்களை தவிர மீதி நாட்களில் சுவாமியை தரிசிக்க பக்கதர்கள் அனுமதிக்கப்படுவதாலும், திருத்தலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும், எவ்வித அச்சமும் இன்றி பலர் தொடர்ந்து கோவில்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, தன்னுடைய கணவர் விசாகன், மகன் வேத்துடன் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதே போல், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா தனுஷும் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். இவர்கள் இருவரது புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது
கடந்த ஓரிரு மாதத்திற்கு முன்பு தான், ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தன்னுடைய தந்தையின் உடல் நலனுக்காக திருப்பதி கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய நிலையில், தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு இருவரும் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.