Prince Release date : தீபாவளி ரேஸில் இணைந்த சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

By Asianet Tamil cinemaFirst Published Jun 21, 2022, 12:20 PM IST
Highlights

Prince Release date : பிரின்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் படம் ரூ.120 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்தார். இதில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சிவாங்கி, பால சரவணன், மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது பிரின்ஸ் படம் தயாராகி வருகிறது. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் டூரிஸ்ட் கைடாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் கார்த்தியின் சர்தார் படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது. பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

💥 here’s the official announcement video!🇮🇳🕊🇬🇧https://t.co/Bc849MvWP1 sir

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan)

இதையும் படியுங்கள்... கணிதத்தில் நூறு.. படிப்பில் சூர்யா மகள் படுஜோரு- தியாவின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் எவ்வளவு தெரியுமா

click me!