
நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருக்கும் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். கட்சி நடவடிக்கைகளை அவரின் குடும்பத்தினர் கவனித்துக்கொள்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட அவர் போட்டியிடவில்லை. விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மட்டுமே அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது.
விஜயகாந்த அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த அவகையில் அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரது காலில் இருந்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏற்கனவே சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று விஜயகாந்த் சிகிச்சை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... புது வீட்டில் பொன்னியின் செல்வன் பட நடிகையுடன் டேட்டிங்... காத்துவாக்குல 2-வது காதல் செய்யும் நாக சைதன்யா
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.