
மே 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட அஜீத் படம் தள்ளிப்போனது போல சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படமும் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதை அப்பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'மிஸ்டர் லோக்கல்’. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். படம் துவங்கிய சமயத்தில் இப்படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. அதையொட்டி சிவகார்த்திகேயன் அஜீத்துடன் மோதுகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அஜீத்தின் ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு மாற்றி அப்பட நிறுவனம் அறிவித்திருந்தது.
அதேபோல் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் ’தேவராட்டம்’ படத்தையும் இந்த நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படம் மே 17-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதியை மாற்றி புதிய ரிலீஸ் தேதியை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கவுதம் கார்த்திக்கின் தேவராட்டம் வருகிற மே 1-ந் தேதியும், சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் மே 17-ந் தேதியும் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டதற்கான காரணம் எதையும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.