சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை..!

 
Published : Jan 11, 2018, 04:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:49 AM IST
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும்  பிரபல பாலிவுட் நடிகை..!

சுருக்கம்

sivakarthikeyan next movie pair is bollywood actress

சிவகார்த்திகேயனின் சீமத்துரை படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்கும் படத்தில் இரு முக்கிய பிரபலங்கள் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபகத்ஃபாசில், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் வேலைக்காரன். சமூகத்தின் முக்கிய பிரச்னைகளின் ஒன்றான உணவு கலப்படமும், அதன் மூலம் உண்டாகும் விளைவுகள் பற்றி அழுத்தமாக சொல்லியிருப்பார் மோகன் ராஜா. இந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வேலைக்காரன் படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கத்தில் சீமத்துரை என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். நெப்போலியன், சிம்ரன், சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 24 ஏ. எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்படிப்பு, தென்காசியில் நடந்து வருகிறது.

சீமத்துரைக்குப் பிறகு சிவகார்த்திகேயன் ”நேற்று இன்று நாளை” படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரஹ்மானிடமும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரிடமும்  பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஷ்ரத்தா தற்போது பாகுபலி புகழ் பிரபாஸ் ஜோடியாக சாஹோ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தையும் 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்கிறது.  இப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டின் முதல் பாதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் குறித்தான அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?