சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்... உதவி கேட்டு மன்றாடும் மகன்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 16, 2020, 06:29 PM ISTUpdated : Nov 16, 2020, 06:34 PM IST
சிவகார்த்திகேயன் பட நடிகருக்கு புற்றுநோய்... உதவி கேட்டு மன்றாடும் மகன்...!

சுருக்கம்

தற்போது தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். 

தமிழில் பல படங்களில் மாமா, கட்ட பஞ்சாயத்து செய்யும் பெரியவர், ஊர் பூசாரி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் மீசை தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார். அந்தப் படத்தில், கருப்பன்… குசும்புக்காரன்…என்று வரும் டயலாக்கை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜில்லா’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

பெரிய மீசையும், தாடியும், குரலும் தான் அவருடைய தனிப்பட்ட அடையாளமாகவே விளங்கி வந்தது. சினிமாவில் மிகப்பெரிய கனவுகளுடன் அலைந்து தற்போது துணை நடிகராக வெளியே தெரிய ஆரம்பித்துள்ள மீசை தவசி புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். கட்டுமஸ்தான தேகத்துடன் மீசை தடவிக்கொண்டு காட்சியளித்து வந்த தவசி, புற்றுநோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பும் தோலுமாக இளைத்து போயுள்ளார். 

தற்போது தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். திரையுலகினர் பலருக்கும் டேக் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உட்பட பலரும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

"எட்டணா இருந்தா.." முதல் "வாடிவாடி.." வரை - திரையரங்கையே அதிரவைத்த வடிவேலுவின் ஹிட் பாடல்கள்!
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!