ஓடிடியில் உலக சாதனை படைக்கப்போகும் ‘சூரரைப் போற்று’... செம்ம குஷியில் சூர்யா ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 16, 2020, 04:28 PM IST
ஓடிடியில் உலக சாதனை படைக்கப்போகும் ‘சூரரைப் போற்று’...   செம்ம குஷியில் சூர்யா ரசிகர்கள்...!

சுருக்கம்

இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கும், மனைவியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.

சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு தரப்பினரும் சூர்யாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா? என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். 

கோபிநாத் எழுதிய சுயசரிதை புத்தகமான Simply Fly – A Deccon odyssey என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு சுவாரஸ்யமான படத்தை இயக்கியுள்ளார் சுதா கோங்கரா. ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு முன்பாகவே சூரரைப் போற்று திரைப்படம் ரூ.100 கோடி வரை பிசினஸ் செய்து ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சர்யப்பட வைத்தது. இதனிடையே தற்போது அமேசான் பிரைமில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் புதிய உச்சம் ஒன்றை தொடப்போகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் செம்ம குஷியில் உள்ளனர். 

 

இதையும் படிங்க: ‘தை’ மகளுடன் முதல் தீபாவளியை கொண்டாடிய சினேகா - பிரசன்னா... மேட்சிங் உடையில் மெர்சலான ஃபேமிலி போட்டோஸ்...!

இந்த படத்தில் நடித்ததற்காக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கும், மனைவியாக நடித்த அபர்ணா பாலமுரளிக்கும் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. தியேட்டரில் மட்டும் ரிலீஸ் செய்திருந்தால் செம்ம மாஸாக இருக்கும் என ரசிகர்கள் புகழ்ந்து வரும் அதே சமயத்தில், ஓடிடியில் வெளியான முதல் நாளே சூரரைப்போற்று படத்தை 55 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இதை தியேட்டர் டிக்கெட் கணக்கில் மாற்றினால் 660 கோடி ரூபாய் வருமாம். தற்போது படம் ரிலீஸ் ஆகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் விரைவில் 100 மில்லியன் பார்வையாளர்களை எட்டி ஓடிடியிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தென்னிந்திய திரைப்படம் படம் என்ற சாதனையை படைக்க உள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!
Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்