சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' பட பாடலில் 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்பளித்ததற்கு பாராட்டுவிழா!

By manimegalai a  |  First Published Feb 18, 2023, 5:33 PM IST

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படத்தில் 'சீன் ஆ சீன் ஆ' பாடலுக்கு 500 உள்ளூர் நடனக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்ததற்காக நடன கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்தபட்டது
 


‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'மாவீரன்' படத்தின் முதல் சிங்கிள், 'சீன் ஆ சீன் ஆ' பாடல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் அனைத்து இடங்களிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. 30 விநாடிகளுக்கும் குறைவான இந்த க்ளிம்ப்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் எனர்ஜி மற்றும் துடிப்பான நடன அசைவுகள் அனைவரின் ஆர்வத்தையும் கவர்ந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்தப் பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சே இதில் இடம்பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக்கலைஞர்கள்தான். சென்னையைச் சேர்ந்த 500+ நடனக் கலைஞர்கள் மற்றும் 150+ குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர் வரை கலந்து கொண்டுள்ள இந்த பிரமாண்ட பாடல் நேற்று (பிப்ரவரி 17, 2023) வெளியானது.  கபிலன் மற்றும் லோகேஷ் பாடல்களை எழுதியுள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் - சின்னி பிரகாஷ், . பாபு மற்றும் மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரை பாராட்டினர் மற்றும் சென்னையில் இருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். எண்ணூரில் பிரம்மாண்டமான நடனக் கலைஞர்கள் மற்றும் கூட்டத்தை உள்ளடக்கிய இந்த மாஸ் நம்பர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுனில் நடிக்கும் ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர். மாவீரன் படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்குகிறார், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்க, பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!