
சின்ன திரையில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு, தொகுப்பாளர், காமெடியன் என தன்னுடைய பாதைகளை வெற்றி பாதையாக மாற்றியவர் சிவகார்த்திகேயன்.
திரையுலகிற்கு வந்து ஐந்தே வருடங்களில் பத்தே பத்து படங்களில் மட்டும் நடித்து இன்று ஒரு முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிட்டார். இதற்கு காரணம் கதை தேர்வு, அயராத உழைப்பு, விடா முயற்சி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றின் மூலம் இந்த சாதனையை செய்தவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்று கூட சொல்லலாம்.
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
இவர் நடித்த அத்தனை படங்களும், ரசிகர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் பிடித்தவை, தற்போது விஜய்க்கு அடுத்து குழந்தை ரசிகர்களை அதிகமாக கொண்டவர் சிவா கார்த்திகேயன் என சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு கூறியுள்ளது.
இவர் மேலும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய உயரத்தை எட்டக்கூடிய திறமையும், அதிர்ஷ்டத்தையும் ஒருங்கே பெற்ற சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.