எதையும் எதிர்கொள்ளும் மனநிலை வேண்டும் - சிவகார்த்திகேயன் மாணவர்களுக்கு அட்வைஸ்...

First Published May 13, 2017, 3:08 PM IST
Highlights
sivakarthikeyan advise for plus two students


தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. பள்ளி மற்றும் தனித்தேர்வு மாணவர்கள் என மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வின் முடிவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்க்கை தொடங்கப்போகும் நிலையில் மாணவர்களுக்கு இந்த தேர்வில் கிடைக்கப்போகும் மதிப்பெண்கள் மிக முக்கியமானது. 

எனவே டென்ஷனுடன் தேர்வு முடிவையும், வரப்போகும் மதிப்பெண்ணையும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவ, மாணவிகளுக்கு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் அறிவுரை ஒன்றை கூறியுள்ளார்

'இன்று பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகிறது. எந்த முடிவு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருங்கள்.

 இந்த தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் நீங்கள் படிக்கும் படிப்பை மட்டுமே முடிவு செய்யத்தக்கது, உங்கள் வாழ்க்கையை அல்ல. வாழ்க்கையில் இன்னும் நிறைய பயணங்களை சந்திக்க உள்ள நீங்கள் மன தைரியத்துடன் இருங்கள்' என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்

ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் குறைவு அல்லது தேர்வில் தோல்வி காரணமாக பல மாணவர்கள் தற்கொலை முடிவை எடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு எந்த மாணவரும் அதுபோல் ஒரு முடிவை எடுத்துவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. 

இதைத்தான் சிவகார்த்திகேயனின் டுவீட்டும் மறைமுகமாக தெரிவிக்கின்றது. தற்போது புதுப்புது படிப்புகள் அறிமுகமாகியுள்ளதால் எவ்வளவு மதிப்பெண் கிடைத்தாலும் அதற்குரிய படிப்புகள் படித்து வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற நிலை உள்ளது. 

எனவே மாணவர்கள் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் அறிவுரையாக உள்ளது.

click me!