சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

By manimegalai a  |  First Published Oct 4, 2022, 9:03 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 


சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பிரின்ஸ்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா என்கிற வெளிநாட்டு நடிகை ஹீரோயினாக நடித்துள்ளார். ரொமான்டிக் மற்றும் அதிரடி ஆக்ஷன் கலந்த கலவையாக உருவாக்கிய  இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மேலும் முக்கிய வேடத்தில், சத்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் ரிலீஸ் தேதி குறித்த தகவல் இதுவரை வெளியாகாத நிலையில், தற்போது படக்குழு ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்: கஞ்சா பூ கண்களால்... ரசிகர்களை போதையேற்றும் அதிதி! லோ அங்கிள் போஸில் பார்த்து நிலைகுலைய வைத்த போட்டோஸ்!
 

அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி 'பிரின்ஸ்' திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 9 தேதி மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் திரைப்படம் நடிகர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள 'சர்தார்' படத்துடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: இலியானாவா இப்படி? டூ பீஸ் உடையில்... உச்ச கட்ட கவர்ச்சி! பார்த்ததுமே பதறவைத்த ஹாட் போட்டோஸ்!
 

click me!