சிவாஜி கணேசன் தூக்கி வைத்திருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா? தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

By manimegalai a  |  First Published Apr 2, 2020, 3:55 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய கையில்... தூக்கி வைத்திருக்கும்,  பிரபல வாரிசு நடிகையின் புகைப்படம், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னுடைய கையில்... தூக்கி வைத்திருக்கும்,  பிரபல வாரிசு நடிகையின் புகைப்படம், ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

தளபதி விஜய் நடித்த, 'சந்திரலேகா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், பிரபல நட்சத்திர தம்பதி மஞ்சுளா - விஜயகுமாரின் மகள் வனிதா.

Tap to resize

Latest Videos

இந்த படத்தை தொடர்ந்து, ஒரு சில தமிழ் மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு  செட்டில் ஆனார். ஆனால் இவருக்கு முதல் திருமணம் சரியாக அமையாததால், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இதன் பின்னர் இரண்டாவது திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்தது.

தற்போது தன்னுடைய இரு மகள்களுடன் தனியாக வசித்து வரும், வனிதா... கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வாயாடி என்கிற பெயரை எடுத்தார். காரணமின்றி இவர் அடுத்தவர் பிரச்சனையில் தலையிட்டு, சின்ன பிரச்னையை கூட பெரிதாக்குவதால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றிய வனிதா, யு டியூப் சேனல் ஒன்றை தொடங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில் வனிதா, சிறிய குழந்தையாக இருக்கும் போது, தன்னை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அன்பாக கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனந்தமாக வனிதா இதில் சிரித்து கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

View this post on Instagram

My 1st birthday pics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on Apr 1, 2020 at 2:16pm PDT

click me!