சிவாஜியின் உயில் ஜோடிக்கப்பட்டது... நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

Published : Jul 19, 2022, 02:32 PM IST
சிவாஜியின் உயில் ஜோடிக்கப்பட்டது... நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

சுருக்கம்

Sivaji ganesan : சிவாஜியின் சொத்தில் தங்களுக்கும் பங்கு இருப்பதாகவும், தங்களுக்குரிய பங்கை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரி அவரது மகள்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

நடிகர் சிவாஜி கணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், அவருக்கு சொந்தமான ரூ.270 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை எனவும், அவர் பெயரில் இருந்த வீடுகளின் வாடகைப் பங்கை தங்களுக்கு தராமல் ஏமாற்றியதாகவும் கூறி சிவாஜியின் மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தங்களுக்கும் சொத்துக்களில் பங்கு இருப்பதாகவும், தங்களுக்குரிய பங்கை பிரித்து தர உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 1999-ல் எழுதப்பட்ட பதிவு செய்யப்படாத சிவாஜியின் உயில், 2021-ல் தான் வெளிவந்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... கொசு வலையில் தைத்த உடையில்.. பக்க கிளாமர் போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா..

மேலும் அந்த உயில் ஜோடிக்கப்பட்டது எனவும், அது சட்டப்படி மெய்பித்து சான்று பெறாததால் அது செல்லாது எனவும் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் வாதிடப்பட்டது. பாகப்பிரிவினை கோரி 2021-ல் அனுப்பிய நோட்டிஸிற்கு அளித்த பதிலில் தான் உயில் எழுதியது தெரியவந்ததாகவும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

சாந்தி திரையரங்கில் இருந்த சிவாஜி மற்றும் கமலாவின் பங்குகள் முறைகேடாக ராம்குமார் மற்றும் பிரபுவின் மகன்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்... samantha ruth prabhu : லேடி ‘ரோலெக்ஸ்’ ஆகிறார் சமந்தா... தளபதி 67-ல் விஜய்க்கு வில்லியாக மிரட்டப்போகிறாராம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?