ரயிலில் பாடிய பெண்ணை.. வலைபோட்டு தேடும் டி இமான் !

Published : Jul 19, 2022, 01:00 PM ISTUpdated : Jul 19, 2022, 01:05 PM IST
ரயிலில் பாடிய பெண்ணை..  வலைபோட்டு தேடும் டி இமான் !

சுருக்கம்

ரயிலில் பாடிய  பெண்ணை தொடர்பு கொள்வதற்கான  தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ், கன்னட, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய சினிமாக்களில் டாப் இசை அமைப்பாளராக வலம் வறுபவர் டி இமான். விஜயின் தமிழ் படம் மூலம் அறிமுகமான டி இமான் நூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய திரைப்பட விருதை வென்ற ஐந்தாவது தமிழ் இசை அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஃபிலிம் ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார் இமான்.

மேலும் செய்திகளுக்கு..அரை நிர்வாணமா நடிச்சதுக்கே திட்றாங்க.. இனி நிர்வாணமா நடிக்கவும் தயாரா இருக்கேன் - இரவின் நிழல் பட நடிகை தடாலடி

இவரின் இசைக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ரஜினியின் அண்ணாத்தே  படத்தில் ஹிட் பாடல்களை கொடுத்திருந்த டி இமான். சமீபத்தில் எதற்கும் துணிந்தவன், யுத்த சத்தம், மைடியர் பூதம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார். தற்போது கேப்டன், மாலை, காரி, பொய்க்கால் குதிரை,பொது, வள்ளி மயில் உள்ளிட்ட படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இவர் போராடி மேலே வந்தவர் என்பதால் தன் துறையை சார்ந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களை கை கொடுத்து தூக்குவதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார். இதற்கு என தனி டீமையே உருவாக்கி  பாடும் திறன் கொண்ட  மாற்றுத்திறனாளிகளுக்கு பெரிதும் உதவி வருகிறார் இமான். அந்த வகையில் சமீபத்தில் ஓடும் ரயிலில் பாடி பிரபலமான ஒரு பெண்ணை தேடி வருகிறார் இசையமைப்பாளர்.

 

 

சமீபத்தில் வலைத்தளத்தை சுற்றி வந்த ஒரு வீடியோவில் 'ஒரு பெண் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலைநேர்த்தியாக பாடியிருந்தார்'. அவரது குரலில் அத்தனை இனிமை இருந்தது. இந்த வீடியோ இணையத்தை அக்கிரமித்ததை தொடர்ந்து பலரும் இந்த பெண்ணுக்கு யாராவது நாள் வாய்ப்பு கொடுங்கள் என் கூறி இசை ஜாம்பவான்களின் ட்வீட் பக்கத்தோடு டேக் செய்து வந்தனர்.

மேலும் செய்திகளுக்கு..சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!

இந்நிலையில் அந்த பெண்ணை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி எண் இருந்தால் பகிருங்கள் என இமான் ட்வீட் செய்துள்ளார். விரைவில் அந்தப் பெண் அடையாளம் காணப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த செயல் குறித்து இமானுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு...வெறித்தனமான ஒர்க் அவுட்... ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்லிம் பிட்டாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்..!

முன்னதாக திருமூர்த்தி என்ற பார்வை குறைபாடு கொண்ட இளைஞர் 'கண்ணான கண்ணே' பாடலை அருமையாக பாடியிருந்ததை கண்ட இமான் 'அண்ணாத்தை படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்தார்' அந்த படத்தில் வா சாமி பாடலை பாடியிருந்தார் திருமூர்த்தி.  சமீபத்தில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி வீடியோ மூலம் பிரபலமானவர்தான் திருமூர்த்தி. அவரை நேரில் சந்தித்த கமலஹாசன் ஏ ஆர் ரகுமான் இசை பள்ளியில் சேர்த்து அவருக்கு இசை கற்க உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

Ayyanar Thunai : டைவர்ஸுக்கு நாள் குறித்த நிலா... அதிர்ச்சியில் சோழன் - அனல்பறக்கும் இன்றைய எபிசோடு
Siragadikka Aasai : சிந்தாமணியின் சகுனி வேலையால் பயந்து நடுங்கும் விஜயா... மீனாவின் பிளான் சக்சஸ் ஆகுமா?