பிரபல பாடகிக்காக பங்களா கட்டிய நடிகர் திலகம்.. சிவாஜியின் உடன்பிறவா சகோதரியாக இருந்தது இவங்க தான்..

By Ramya s  |  First Published Oct 4, 2023, 11:03 AM IST

சிவாஜிக்கும் - லதா மங்கேஷ்கருக்கும் இடையே சகோதர - சகோதரி பந்தம் இருந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை


நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், பிரபல பாடகி லதா மங்கேஷ்கரும் தங்கள் துறைகளில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக இருந்து வந்தனர்.. பல ஆண்டுகளாக இந்திய சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் இருவருமே முக்கிய பங்கு வகித்துள்ளனர். ஆனால் சிவாஜிக்கும் - லதா மங்கேஷ்கருக்கும் இடையே சகோதர - சகோதரி பந்தம் இருந்தது என்பது பலருக்கும் தெரியாத உண்மை.. ஆம் இருவரும், ஒருவரையொருவர் தங்கள் சொந்த உடன்பிறப்புகளாக கருதினர்.

இந்து நாளிதழுக்கு அளித்த பழைய பேட்டியில், சிவாஜி கணேசனின் மகன் பிரபு, தனது தந்தையும் லதா மங்கேஷ்கரும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருந்தார். லதா மங்கேஷ்கர் சிவாஜியின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவர் சிவாஜியின் படம் ஒன்றை பார்த்துவிட்டு, அவரைச் சந்திக்க தமிழகம் வந்தார் என்றும் தெரிவித்தார். அந்த முதல் வருகையிலேயே இருவருக்கும் இடையேயான நட்பு மேலும் வலுவடைந்தது என்றும், லதா மங்கேஷ்கரும் அவரது சகோதரிகளும் உண்மையில் ‘சிவாஜி அண்ணா’ என்று அழைப்பார்கள் என்றும் நடிகர் பிரபு தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

உண்மையில், அவர்களின் பிணைப்பு மிகவும் இறுக்கமாக இருந்தது என்றும், 1987 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ஆனந்த் என்ற படத்தில் ‘ஆராரோ ஆராரோ’ பாடலைப் பாடியதற்கு லதா மங்கேஷ்கர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டார் என்றும் அவர் கூறினார். தனது மூத்த சகோதரனுக்காக இந்த பாடலை பாடியதாக கூறி சம்பளம் வாங்க மறுத்துவிட்டார் என்றும் பிரபு கூறினார்.‘ ஆராரோ ஆராரோ’ பாடல் லதா மங்கேஷ்கரின் முதல் நேரடி தமிழ் பாடலாகவும் அமைந்தது. 

லதா மங்கேஷ்கருக்கு பங்களா கட்டிய சிவாஜி கணேசன் 

லதா மங்கேஷ்கர் எப்போது சென்னை வந்தாலும் தங்குவதற்காக, சென்னையில் உள்ள தனது அன்னை இல்லம் வீட்டில் ஒரு பங்களாவை நடிகர் சிவாஜி கட்டினார் என்றும் பிரபு தெரிவித்துள்ளார். மேலும் லதா மங்கேஷ்கருக்கு ஹோட்டல் உணவு பிடிக்காது என்பதால், அவருக்கும் தனது தாயார் உணவு சமைத்து கொடுத்து, ஃபிளாஸ்கில் கொதிக்க வைத்த நீரை கொடுத்து அனுப்புவார் என்று பிரபு பேட்டியில் தெரிவித்தார். விசேஷ சமயங்களில் இரு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் பரிசுகளை அனுப்பி வைப்போம் என்றும் அவர் கூறினார்..

லதா மங்கேஷ்கர் 

லதா மங்கேஷ்கர், இந்தூரில் மராத்தி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், நாடு கண்டிராத சிறந்த பாடகிகளில் ஒருவர். அவர் 20 க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். அவர் 'மெல்லிசை ராணி' என்று சரியாக குறிப்பிடப்படுகிறார். 1950 களில் இருந்து 1990கள் வரை ஒரு திரைப்பட தயாரிப்பாளராகவும், ஒரு இசை தயாரிப்பாளராகவும் சிறிது காலம் பணியாற்றினார். 25,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அவர் 2022 பிப்ரவரி 6-ம் தேதி காலமானார். 

கருணாநிதி வசனத்தில் நடிக்க மறுத்தது ஏன்? பல வருட ரகசியத்தை உடைத்து பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சிவாஜி கணேசன் 

சிவாஜி கணேசன் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக பலரால் கருதப்படுகிறார். அவரின் பன்முகத்திறமை கொண்ட நடிப்புக்காக அறியப்பட்டவர். அவர் தனது ஏழு வயதில் தனது தந்தையின் விருப்பத்தை மீறி ஒரு நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்குதான் கணேசனுக்கு நடிப்பு மட்டுமின்றி நடனமும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில் சிவாஜி கதாப்பாத்திரத்தில் நடித்ததன் காரணமாக, பெரியார் அவருக்கு சிவாஜி என்ற பெயரை சூட்டினார்.. அவரது பல்துறை நடிப்புத் திறன் காரணமாக, அவர் பெரும்பாலும் நடிகர் திலகம் என்று அழைக்கப்படுகிறார். ரஜினி, கமல் உள்ளிட்ட பல உச்ச நடிகர்களுக்கும் சிவாஜி தான் முன்மாதிரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!