சாப்பாட்டுக்கு கூட வழியில்லை... செருப்பு விடும் இடத்தில் தூங்கினேன்! அனைவரையும் அழ வைத்த வேல்முருகன்!

By manimegalai a  |  First Published Oct 7, 2020, 3:09 PM IST

இன்று முன்னணி கிராமிய பாடகர்களில் ஒருவராக இருக்கும், வேல்முருகன் நேற்று பிக்பாஸ் அனைவருடைய கதையையும் கூற சொல்லிய போது, பாடகர் வேல்முருகன் முதலாவதாக வந்து தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். 
 


இன்று முன்னணி கிராமிய பாடகர்களில் ஒருவராக இருக்கும் வேல்முருகன், நேற்று பிக்பாஸ் அனைவருடைய கதையையும் சொல்ல சொன்ன போது, முதல் ஆளாக வந்து தன்னுடைய வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார். 

"நான் பிறந்து வளர்ந்தது கடலூர் மாவட்டம் முதலை என்கிற ஒரு குக் கிராமம். பஸ் வசதி கிடையாது , ஒரு குடிசை வீடு தான். நான் பள்ளிக்கூடம் செல்வதே அங்கு மதியம் உணவு தருவார்கள். அதை கொண்டு வந்து தான் நாங்கள் குடும்பமாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிடுவோம். சனி ஞாயிறுகளில் கூட இன்று பள்ளிக்கூடம் போகவில்லையா என அம்மா கேட்பாங்க அன்று விடுமுறை என்று சொன்னால் அப்போ இன்று சாப்பிட முடியாதா என சொல்லுவாங்க. அந்த வலி இப்போதும் என் மனதில் உள்ளது என கண் கலங்கியபடி கூறி... தன்னுடைய ஆரம்ப கால கதையை விளக்கினார். 

Tap to resize

Latest Videos

undefined

இதனால் எப்படியும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற வலியும் வேதனையும் வந்தது. பின்னர் எங்களுடைய கிராமங்களில் ரேடியோக்களில் பாடல்கள் ஓடும், அதனை கேட்பேன். ஏதாவது வசதி படைத்தவர்கள் வீட்டில், காதுகுத்தி, விசேஷம் என்றால் அங்கு மொய் வைக்கும் நேரத்தில் பாடல் பாடினால், சாப்பாடு கிடைக்கும் மற்றும் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுப்பாங்க அதை நோட்டு புத்தகம் வாங்க வைத்து கொள்வேன். விடுமுறை நாட்களில் கிராமத்தில் உள்ளவர்கள் ஆடு மாடுகளை மேய்ப்பேன். அது அனைத்தையும் மேய்த்து விட்டு வந்து, சாயங்கால நேரத்தில் தன்னுடைய அம்மா கஞ்சி அல்லது கூழ் வைத்திருந்தால் சாப்பிடுவேன். சோறு இருந்தாலும் சில சமயங்களில் அதற்கு குழம்பு வாங்குவதற்கு தன்னுடைய அம்மா வீடு வீடாக... சென்று நிற்பார்கள் என மனதை உருக வைக்கும் அளவிற்கு தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த வறுமையின் காரணமாகவே தன்னுடைய அம்மா உடல் நலமின்றி இறந்தார். அவரை தொடர்ந்து இரண்டே வருடத்தில் தன்னுடைய தந்தையும் இறந்து விட்டார். நானும் அண்ணனும் தான். பல மேடைக் கச்சேரிகளில் நான் பாடிய போது, சிலர் என்னுடைய திறமையை பார்த்து, இங்கு பாடினால் ஒரு டீ மற்றும் வடை தான் கிடைக்கும். இசை தான் உன்னுடைய லட்சியம் என்றால் நீ... சென்னைக்கு போ என்று கூறினார்கள்.

சென்னைக்கு போக வேண்டும் என்றாலும், என்னிடம் அதற்கான காசு இல்லை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக 170 ரூபாய் சேர்த்து சென்னைக்கு போக முடிவு செய்தேன். சென்னைக்கு வந்து இசை கல்லூரியில் அட்மிஷன் போட்ட பின் அன்று இரவு நான் சென்னையில் தங்க இடம் இல்லை. ஒருவர் ஒவ்வொரு மாவட்டத்தின் சார்பிலும் மாணவர்கள் தங்க அரசு சார்பில் அறை உள்ளது என அங்கு அழைத்து சென்றார். அது ஒரு சிறிய அறை, ஆனால் அங்கு கிட்ட தட்ட 40 பேர் இருந்தார்கள். என்னை பாட வைத்து கேட்டு விட்டு பின்னர் அங்கு தூங்க அனுமதித்தனர். அதுவும் அனைவரும் படுத்த பின் இடம் இருந்தால் அங்கு தான் நான் படுக்க வேண்டும் என சொன்னாங்க. 

அவர்கள் அனைவரும் படுத்த பின், அனைவரும் செருப்பு விடும் இடம் மட்டுமே இருந்தது. அந்த நாற்றம் வீசினாலும், அந்த இடத்தை துடைத்து விட்டு, செருப்புகள் அனைத்தும் ஓரமாக வைத்து விட்டு அங்கு தூங்கியதாக கூறியுள்ளார். 

2004 ஆம் ஆண்டு நான் இந்திய ராணுவம் பற்றி தான் எழுதிய கவிதைக்காக, அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் தனக்கு வாழ்த்து கடிதமும் பரிசும் வழங்கினார், அதனை தன்னுடைய கல்லூரியில் ப்ரேயரில் வைத்து கொடுத்தார்கள். ஒரு சமயம் பொங்கல் திருவிழா அன்று,  தன்னை ஊருக்கு செல்லவில்லையா என கேட்டார் ஒரு பெண். அவரிடம் தனக்கு அப்பா அம்மா இல்லை என்பதை கூறினேன். பின்னர் அவர் என் மேல் காட்டிய அக்கறை, எனக்கு அவர் மீது காதல் வந்தது. அதை அவரிடம் கூறினேன் அவர் ஏற்றுக்கொண்டார்.

அந்த சமயத்தில் யாராக இருந்தாலும், என்னை காதலிப்பார்களா? என தெரியாது. ஆனால் அவர் துணிந்து என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை மீண்டும் அதே துறையில் படிக்க வைத்து வருகிறேன். தனக்கு விஜய் டிவி மூலம் தான் 'சுப்ரமணியபுரம்' படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது கிட்ட தட்ட 350 பாடல்கள் பாடியுள்ளேன் என கூறி அனைவரையும் அழ வைத்து விட்டு சென்றார் வேல்முருகன்.   

  

click me!