மனம் மாறிய சூப்பர் ஸ்டார்... அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Oct 7, 2020, 1:54 PM IST
Highlights

இந்நிலையில் ரஜினி தன் மனதை மீண்டும் மாற்றிக் கொண்டுள்ளாராம். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

'தர்பார்' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ''அண்ணாத்த''. இதில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா நடிப்பதாகவும், வில்லியாக குஷ்புவும், வக்கீலாக நயன்தாராவும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. "அண்ணாத்த" என்ற தலைப்புக்கு ஏற்ற மாதிரி அண்ணன் - தங்கை சென்டிமெண்ட் செம்ம எவியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்த படத்தில் முதல் இரண்டு கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில்,  உலகம் முழுவதையும் உச்சகட்ட அச்சத்தில் வைத்துள்ள கொரோனா பீதியால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதலே படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின் படி மீண்டும் ஷூட்டிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 

 

இதையும் படிங்க: 

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் வரும் 10ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும், ரஜினிகாந்த் இல்லாத காட்சிகள் அப்போது படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு ஜனவரியில் தான் ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.  இடையில் மீண்டும் ரஜினிகாந்த் அக்டோபர் 10ம் தேதி ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. ரஜினி தன் காரில் சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு பயணம் செய்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. 

 

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் நயனையே அடித்து தூக்கிய வனிதா... பீட்டர் பாலுடன் கோவாவில் களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

இந்நிலையில் ரஜினி தன் மனதை மீண்டும் மாற்றிக் கொண்டுள்ளாராம். கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வது பாதுகாப்பானது இல்லை என்று நண்பர்கள் ரஜினிக்கு அறிவுரை வழங்கினார்களாம். என்ன தான் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்த வயதில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளார். 

click me!