
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டாவது நாளே குறும்படம் போட வேண்டும் என்கிற அளவிற்கு பிரச்சனை நேற்றையதினம் தூள் கிளப்பியது. ஆனால் புரோமோவில் பார்த்த அளவிற்கு பிரச்சனை பெரிதாக வில்லை. கடைசியில் சப்னு முடிந்துவிட்டது.
இந்நிலையில் தற்போது இந்த வாரம் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ள நான்கு பேர் யார் யார் என தெரியப்படுத்தும் விதமாக ஒரு புரோமோ வெளியாகியுள்ளது.
லிவிங் ஹாலில் அனைத்து போட்டியாளர்களும் அமர்ந்திருக்க, எழுந்து வந்து பேசும் பாலா, இங்கு உள்ள ஒருவருடைய கதை மற்றொருவருக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளது என கூறுகிறார். உதாரணத்திற்கு சனம் தன்னுடைய 20 வயதில் மேலே இருந்து கீழே விழுந்து, 14 மாதத்திற்கு பின்பு தான் எழுந்து அமர முடிந்ததாக கூறினார் என அவரை பற்றி கூறுகிறார்.
அதே போல் ஆரியின் கதையும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. 10 பேர் அவருடைய கதையை கேட்டால் சாதிக்க வேண்டும் என்று தோன்றும் என கூறிய பின், இந்த வாரத்தின் நாமினேஷன் செய்பவர்கள் யார் யார் என கூறுகிறார்.
இந்த லிஸ்டில் தற்போது, சனம் ஷெட்டி , கேபிரில்லா , ரேகா, மற்றும் சம்யுக்தா ஆகியோர் பெயரை அறிவிக்கிறார். இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும், அடுத்த வாரம் இந்த நான்கு பெரும் நாமினேஷனில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.