ஒரு வழியா பிரம்மாண்ட இயக்குநரின் படப்பிடிப்பு தொடங்கியாச்சு... தாறுமாறு வைரலாகும் ஷூட்டிங் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Oct 06, 2020, 08:19 PM IST
ஒரு வழியா பிரம்மாண்ட இயக்குநரின் படப்பிடிப்பு தொடங்கியாச்சு... தாறுமாறு வைரலாகும் ஷூட்டிங் வீடியோ...!

சுருக்கம்

 தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு   “பாகுபலி” இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டமான “ஆர் ஆர் ஆர்” திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மார்ச் மாதம் வெளியாகி தாறுமாறு வைரலானது. தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முகக்கவசம், கையுறை சகிதமாக அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படிப்பு தொடங்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி
ஜப்பான் வாடை அடிக்குதே... வா வாத்தியார் டிரெய்லர் ரியாக்‌ஷன் எப்படி இருக்கு?