ஐசியு - வில் இல்லை... கொரோனாவில் இருந்து மீண்டு வந்த பாடகி கனிகா கபூர்! உருக்கமான பதிவு..!

By manimegalai aFirst Published Apr 5, 2020, 10:46 AM IST
Highlights

பல பாலிவூட் திரைப்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை கவர்ந்தவர், பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

பாடகி கனிகா கபூர்:

பல பாலிவூட் திரைப்படங்கள் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி தன்னுடைய இனிமையான குரலால், ரசிகர்களை கவர்ந்தவர், பாடகி கனிகா கபூர். இவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது இவருடைய ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

கொரோனா தொற்று:

கனிகா கபூர், கடந்த மாதம் லண்டன் சென்று திரும்பிய போது இவருக்கு யாரோ ஒருவர் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக இந்த பாதிப்பு வெளிப்படவில்லை என்றாலும், சில நாட்கள் கழித்து இவருக்கு காச்சல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, டெஸ்ட் செய்து பார்த்தபோது கொரோனா இருப்பது உறுதியானது.

அமைச்சர்களுடன் பார்ட்டி:

லண்டனில் இருந்து திரும்பி வந்த கையேடு கனிகாகபூர், மத்திய அமைச்சர் உள்பட 56 பேர் கலந்து கொண்ட ஒரு பிரமாண்ட விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் கனிகா கபூருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த விருந்தில் கலந்து கொண்ட,  56 நபர்களும், தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையை சேர்ந்தவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக செய்திகள் வெளியானது.

மூடப்பட்ட நட்சத்திர ஹோட்டல்:

மேலும் கனிகா கபூர் கலந்து கொண்ட, பிரபல நட்சத்திர ஹோட்டல், அதிரடியாக மூடப்பட்டு... அங்கு பணியில் இருந்த அனைவர்க்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது.

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் கனிகா:

தற்போது லக்னோவில் உள்ள சஞ்சய்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கனிகா கபூருக்கு, நான்கு முறை கொரோனா டெஸ்ட் எடுத்ததில் பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து ஐந்தாவது முறையாக எடுக்கப்பட்டதில் மட்டுமே நெகடிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னினும், மீண்டும் ஒரு கொரோனா டெஸ்ட் எடுத்து அதில் அவருக்கு நெகடிவ் என வந்தால் மட்டுமே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.

கனிகா கபூர் பதிவு:

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு பின் முதல்முறையாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கனிகா கபூர் கூறியுள்ளதாவது, நான் படுக்கைக்குச் சென்றபோது... நீங்கள் அனைவரும் அன்பான அதிர்வுகளை மட்டுமே கொடுத்தீர்கள். நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆனால் நான் இப்போது ஐ.சி.யுவில் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன். எனது அடுத்த சோதனை எதிர்மறையானது என்று நம்புகிறேன். எனது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பார்க்க வீட்டிற்குச் செல்லக் காத்திருக்கிறேன் அவர்களை மிகவும் மிஸ் பண்ணுவதாக கூறியுள்ளார்.

 

 

click me!